துயிலுமா என் ஜீவன் நீயின்றி ,,,!


கோடி உள்ளங்கள்
அணைத்தால் என்ன
கொள்கையோடு நான்
வாழ்ந்தால் என்ன
கொதிக்கும் என் உதிரமும்
உற்றவள் நீ என்கிறதே

பச்சை வயல்
விளைந்தால் என்ன
பரதேசியாய் நான்
வாழ்ந்தால் என்ன
பார்க்கும் இடமெல்லாம்
பாவையே உன் முகம்
பாவியிவன் விழிகளிலே 
பாசத்தில்
பத்திரமாய் நீ வாழ்கிறாயா?-இல்லை
துன்பமெனும் துயரில் நீ
துயில்கிறாயா ?
தூயவளே தினம் நான்
தூற்றுவது உன்
துயரையல்லவா
துயரத்தோடு
தூரத்தில் நீ இருந்தாலும்
துடித்திடும் என் உயிரும்
துணைவி நீ என்கிறதே
துவண்டு நீ போனால்
துயிலுமா என் ஜீவன் நீயின்றி ,,,! 
                                                 
                                                சிந்து.s

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv