சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் ஆர்வம் அதிகரிக்கும்

சமைக்கும் போது குழந்தைகளை சிறு சிறு வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நொறுக்குத் தீனி மீதுள்ள ஆர்வம் குறைவது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜுரிச் நகரின் மத்திய தொழில்நுட்ப நிலையம் நடத்திய ஆய்வில், சமையலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் குறைவாகச் சாப்பிடுவதில்லை. மாறாக அவர்களுக்குச் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் உண்டாகின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளைச் சாப்பிடும் படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் சாப்பாட்டில் வெறுப்படைந்து, சாப்பிட விரும்புவதில்லை என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
கிளேசின் வான் டெர் ஹோர்ஸ்ட் என்பவர் கூறுகையில், 6 முதல் 12 வயதிலான குழந்தைகளை உடைய ஜேர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து நாட்டுப் பெற்றோர்கள் 300 பேர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது குழந்தைகளை சமையலின் போது சிறுசிறு வேலைகளில் ஈடுபடுத்துவதால் சாப்பாட்டின் மீது ஆர்வம் அதிகரிப்பது தெரியவந்தது. இதே சமயம் நொறுக்குத் தீனி மீதுள்ள ஆர்வம் குறைந்து முழுமையாக சாப்பிடுவதில் நாட்டம் ஏற்படுவதும் தெரியவந்தது.
வற்புறுத்தி, அதட்டி, மிரட்டி குழந்தைகளைச் சாப்பிட வைப்பதினால் அவர்களுக்கு சாப்பிடுவதில் வெறுப்புத் தோன்றுகிறது எனவும், எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் முடிவுகள் Appetite என்ற அறிவியல் பத்திரிகையிலும், ETHZ Life என்ற பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv