தகாத உறவுகளால் மூளை செயல்பாடுகள் பாதிப்படையும்

இளம் வயதில் தகாத உறவு வைத்துக் கொண்டால் எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இத்தகைய கலாசாரம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

பிறந்து 40 நாட்களேயான எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். நன்கு வளர்ந்தவை, நடுத்தர வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன.
பாலியல் உணர்வைத் தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.
இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது: மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் தவறான உறவிற்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு காணப்பட்டது.
நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தன. அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.
மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv