ராசி பலன் 2012

ராசி பலன் 2012
தென்னிந்திய பிரபல ஜோதிடர் வைகானச ஆகமசேவா பூஷன ஸ்ரீ மாதவ பட்டாச்சாரியார் தனித்துவமாக கணித்து வழங்கும் ராசி பலன்கள்மேஷம்(Mesham)


மேஷ ராசிக்குரியவர்கள் 2012 ஆம் ஆண்டில் மிக்க கவனத்துடன் இருக்க வேண்டும். சென்ற வருடம் ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் இப்போது ஏழாம் இடத்தில் கண்டச்சனியாக சஞ்சாரம் செய்வதாலும், குரு பகவான் ஜென்மத்தில் சஞ்சாரம் செய்வதாலும், அவர்கள் செய்கின்ற தொழில் மற்றும் பணி செய்யும் இடங்களில் கவனத்துடன் செயற்பட வேண்டியது அவசியம். ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் 17/05/2012 இற்கு பின்னர் இரண்டாம் இடத்தில் வருவதால் பண வரவுகள், தொழில் முன்னேற்றங்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

ரிஷபம் (Rishabam)


சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே , இவ்வாண்டில் சனி பகவான் சாதகமான, இதமான ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால், சென்ற வருடத்தை விட இவ்வருடத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். மன தைரியம் கூடும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அதே சமயம் ஒரே ஸ்தானத்தில் குரு பகவான் 17 /05 /2012 வரையில் சஞ்சாரம் செய்வதாலும், பின் ஜென்ம குருவாக சஞ்சாரம் செய்வதாலும், பல சுப செலவுகள் ஏற்படும் அதேவேளை , உடல் நல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே பண விடயங்களில் மிக்க கவனம் தேவை. இந்த ஆண்டு மிகவும் மென்மையான ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கலாம்.


மிதுனம்(Midhunam)


புதனின் ஆதிக்கம் கொண்ட மிதுனராசிக்குரியவர்கள் இவ்வாண்டு தங்கள் ராசியின் எண்ணான, ஐந்தாம் எண்ணில் இவ்வாண்டு பிறப்பதால், இவ்வாண்டு தங்களுக்கு மிகவும் ஏற்ற ஆண்டாக அமையும். சனி பகவான் ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு நல்ல பலன்களை கொடுக்க கூடியதாக அமைகிறது. பொருட்சேர்க்கை தனசேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. குரு பகவான் பதினோராம் இடமான லாப ஸ்தானத்தில் 17 /05 2012 வரையில் சஞ்சாரம் செய்வதால், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள், தனசேர்க்கை, வஸ்துவாகன சேர்க்கை, தானிய சேர்க்கை என எல்லாவகையிலும் சாதகமான பலன்களே ஏற்படும்.17/05/2012 இற்கு பிறகு குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் செலவுகள் கூடும். மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வருட முற்பகுதியில் நல்ல பலன்களும் 2012 பிற்பகுதியில் சுமாரான பலன்களையும் எதிர்பார்க்கலாம்.

கடகம்(Kadaham)


சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடக ராசிக்காரர்களே , 2012 ஆம் ஆண்டு தங்களுக்கு சோதனை மிகு ஆண்டாக அமையபோகிறது. ஏனென்றால் சனி பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி நான்காம் இடத்தில் அட்டமத்து சனியாக சஞ்சாரம் செய்வதால், மன தைரியம் குறைவடையும். தொழிலில் பல கஷ்ட நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு. செலவுகள் அதிகரிக்கும். மேலும் குரு பகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதாலும், சுப பலன்களை விட அசுப பலன்களையே கொடுப்பார். எனவே எல்லாவகையிலும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம்.

சிம்மம்(Simmam)


சிம்மம்(Simmam) சூரிய பகவானின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, சனி பகவான் இதுவரை 7 1/2 ஆண்டுகளாக கொடுத்த கெடுதலான பலன்கள் மறைந்து நற்பலன்களை கொடுக்க ஆரம்பிப்பார். தொழில் உயர்வு, புது தொழில் தொடங்குதல், புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மனதில் தன்னம்பிக்கை கூடுதலாக இருக்கும். மேலும் 17/05/2012 ற்கு பிறகு குரு பகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால், தன விரயங்கள், தொழிலில் பல பிரச்சனைகள், இன்னும் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம்.இன்னும் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே குரு பகவான் சுமாரான பலன்களை கொடுப்பார். பொதுவாக இந்த ஆண்டு சிம்ம ராசிகாரர்களுக்கு மிகவும் ஏற்றமிகு சந்தோசமான ஆண்டாக அமையும்.

கன்னி (Kanni)


புதன் ஆதிக்கம் கொண்ட கன்னி ராசிகாரர்களே, இவ்வாண்டில் சனி பகவான் ஜென்ம ஸ்தானத்தில் இருந்து விலகி விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதாலும், ஏழரை சனியாக தொடர்ந்து இருப்பதாலும், தங்களுக்கு பல வகையிலும் செலவுகள் தொடரும். தொழில் பிரச்சினை, தடங்கல்கள், குடும்ப பிரட்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குரு பகவானும், அட்டம ஸ்தானத்தில் 17/05/2012 வரை சஞ்சாரம் செய்வதும் மிக கடினமான சூழ்நிலையை உருவாக்கும். 17/05/2012 இற்கு பிறகு குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால்,சில பல சுப பலன்களை எதிர்பார்க்கலாம். ஆக மொத்தத்தில் சுமாரான பலன்களையே இவ்வாண்டில் எதிர்பார்க்கலாம்.


துலாம் (Thulaam)


சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட துலா ராசிக்காரர்களே , தற்சமயம் சனி பகவான் ஒரே ஸ்தானத்திலே இருந்து ஜென்ம ஸ்தானத்திற்கு ஜென்ம சனியாக மாறியிருப்பதால், நீங்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டிய காலம். ஏழரை சனியாக தொடரும் சனி பகவான் தங்கள் ராசிக்கு பல வகையான இன்னல்களை கொடுக்க வாய்ப்பு இருக்கின்றபடியால் கொடுக்கல் வாங்கல், தொழில்துறை போன்றவற்றில் கவனமுடன் செயற்படுவது அவசியம். வெளியூர் பயணங்களின்போது கவனம் , இயந்திர பணியாளர்கள் கவனமுடன் செயற்படுவது நல்லது.பண விடயங்களில் கவனத்துடன் செயற்படவும். 17/05/2012 இற்கு பிறகு குரு பகவான் வரவு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சுமாரான பலன்களை எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம் (Viruchchigam)


விருச்சிக ராசிகாரர்களே, சென்ற ஆண்டுவரை நற்பலன்களை கொடுத்து கொண்டிருந்த சனி பகவான் பதினோராம் இடத்திலிருந்து விரய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி ஏழரை சனியாகவும் சஞ்சாரம் செய்வதால் இவ்வருடம் தாங்கள் எல்லாவற்றிலும் கவனமாக செயல்படுவது அவசியம். பல வகையிலும் செலவுகள் கூடும். தொழில் துறைகளில் பல பிரச்சினைகள் தொடங்கும். மாணவர்களின் படிப்பில் கவனம் தேவை. குடும்ப உறவில் மேன்மை தேவை. வியாபார பெருமக்கள் பண விடயங்களில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

தனுசு (Dhanusu)


குரு பகவான் ஆதிக்கம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே , சனி பகவான் சென்ற ஆண்டில் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்ததால் தொழிலில் தடங்கல், அதீத செலவுகள், நஷ்டங்கள், விரயங்கள் ஆகியவற்றை கொடுத்த சனி பகவான் தற்சமையம் பதினோராம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால், எல்லா வகையிலும் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். எனவே இரண்டு ஆண்டுகள் தங்களுக்கு சுப பலன்களையே சனி பகவான் கொடுப்பார். குரு பகவான் 17/05/2012 இல் இருந்து ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சில விரய செலவுகள் ஏற்படலாம். பொதுவாக நல்ல ஆண்டாக அமையும்.

மகரம்(Magaram)


சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்களே , 2012 புத்தாண்டில் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால், நீங்கள் கடுமையான பண நெருக்கடிகளை சந்திக்க முற்படுவீர்கள். தொழிலில் மிக கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. குரு பகவான் வரவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு 17/05/2012 பெயர்ச்சி அடையும் போது சுப காரியங்கள், சுப செலவுகள் என்பவற்றோடு குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கூடும். சுபகாரியங்களையும் எதிர்பார்க்கலாம். இவ்வாண்டு நடுநிலையான ஆண்டாக அமையும்.

கும்பம் (Kumbam)


சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட கும்ப ராசிக்காரர்களே , 2012 இல் சனி பகவான் ஒன்பதாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் சென்ற ஆண்டில் அட்டம சனியாக பல நெருக்கடிகளையும், இன்னல்களையும், உடல் நல பாதிப்புகளையும், கடன் சுமைகளையும், குடும்ப சிக்கல்களையும், பண விரயங்களையும் கொடுத்து வந்த சனி பகவான், இவ்வாண்டிலே நற்பலன்களை கொடுக்க ஆரம்பிப்பார். 17/05/2012 குரு பகவான் மூன்றில் இருந்து நான்காம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் சுமாரான பல பலன்களை எதிர்பார்க்கலாம். தொழில்சார்ந்து பார்ப்பதால் நல்ல பலன்களை எதிர்பார்கலாம்.

மீனம் (Meenam)


குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட மீன ராசிக்காரர்களே , இவ்வாண்டிலே சனி பகவான் சப்த ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் இருந்து அட்டம ஸ்தானமாகிய எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி, அட்டம சனியாக சஞ்சாரம் செய்வதால் மீன ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனமாக இருத்தல் நல்லது. தொழிலில் கடுமையான போட்டிகள், தொழிலில் மாற்றம், பணி செய்யும் இடத்தில் கடுமையான நெருக்கடி ஏற்பட இடமுண்டு. இது வரையில் தன வரவுகளை கொடுத்து கொண்டிருந்த குரு பகவான் 17/05/2012 இற்கு பிறகு மூன்றாம் இடத்திற்கு பெயர்சியாவதால் பண புழக்கத்திற்கு கடுமையான சூழ் நிலையும் புதிய கடன்கள் வாங்கவும் செலவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே மிகவும் சுமாரான பலன்களை எதிர்பார்கலாம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv