மூச்சை நிறுத்திவிடு.

நினைவு தடுமாற
நெஞ்சம் குடை சாய
கண்கள் மடை திறக்க
காதலின் வலிகளை
காதலின் ஞாபகத்தில்
தாங்கிக் கொள்ளும்
காதலியாக அவள்...

காதல் விலகி
காததூரம்...
ஏங்கும் பாவை நெஞ்சிலோ
சோககீதம்...
காத்திருப்பு  வீணானது எனக்
கண்டுபிடிக்கப்பட்டதால்
அவள் இன்று இன்னொருவரின்
மனையாளாய்... அவன்
நினைவு மட்டும்
நித்தம் எரிக்கும் தீச் சுடராய்...
இந்தக் காதல் மட்டும் தானே
இறுதிவரை வலிகளின்
இறங்கு முகமாய் ஆகிறது..
சித்தம் கலங்கி
சிந்தை மயங்கி
சிந்திக்க முடியாத
சிறைப்பறவையாய் அவள்...
பெண்ணவள் கொண்ட
கோலம் போதுமே ...மனமே
நித்தம் கொல்லும்- அவன்
நினைவுகளை நிறுத்திவிடு
இல்லையேல் மூச்சையாவது
நிறுத்திவிடு.....    
                               கல்கி அருணா 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv