அன்பு


உங்களில் எத்தனை பேர் உங்கள் மனைவியை / கணவரை நேசிக்கிறீர்கள்… யாராவது கணவனை / மனைவியை நேசிக்காமலா திருமணம் செய்து கொண்டு வாழுகிறார்கள் ?? என்னடா கேள்வி இது ?  என பார்க்கிறீர்களா ? இன்று எத்தனை பேர் உண்மையான அன்போடு சேர்ந்து வாழ்கிறீர்கள்.. எத்தனை பேர் திருமணம் ஆகிவிட்டதே வேறு வழியே இல்லை… கடமையே என வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்… யோசித்துப்பாருங்கள் ?
நீங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டீர்களா இல்லை உங்கள் வீட்டில் பார்த்து திருமணம் செய்தீர்களா..? எப்படியிருந்தாலும் திருமணம் என்பது இருமனங்களின் சங்கமமாய் இருக்க வேண்டும்.. எப்பொழுது உறவில் உரசல் வருகிறது தெரியுமா..? உஙகள் அன்பு குறையும் போதுதான்… உங்கள் துணை ஒரு தவறு செய்து விட்டாலோ அல்லது உங்களிடம் அவர் ஏதாவது குறையை சுட்டிக்காட்டினாலோ அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ளாததாலோ இப்படி எதுவேண்டுமானாலும் இருக்கலாம்.
இத்தகைய சூழ்நிலையை எப்படிக்கையாளுவீர்கள் ? அதை இரண்டு விதமாக கையாளலாம். ஒன்று கணவருக்கு / மனைவிக்கு புரியும் வகையில் பொறுமையாக எடுத்துச்சொல்லுவது… அல்லது கோபமாக எடுத்துச்சொல்லுவது… இதில் நாம் பெரும்பன்மையாக நேரங்களில் கோபமாகத்தான் சொல்கிறோம். பல நேரங்களில் உங்கள் கோபம் உங்கள் அன்பான கணவருக்கு / மனைவிக்கு நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை புரிந்து கொள்ள வைப்பதை விட காயப்படுத்துவதில் தான் முடியும்.
இத்தகைய சூழ்நிலை ஏற்பட காரணம் என்ன ? எப்படி இதை எதிர்கொள்வீர்கள் ? அனைத்திற்கும் ஒரே ஒரு குணம் மட்டும் போதும். எத்தகைய சூழலையும் நீங்கள் எதிர்கொள்ளலாம் தெரியுமா? ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் உண்மைதான். அதுதான் உங்கள் துணையின் மீது நீங்கள் கொள்ளும் அன்பு உண்மையான தாக இருந்தால் போதும். உங்கள் கணவன் / மனைவி மீது எத்தகைய அன்பு இருக்க வேண்டும் தெரியுமா?? உங்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பைப் போலவே இருக்க வேண்டும்.
உங்கள் மனைவியை / கணவரை முழுமையாக நேசியுங்கள். அவர்கள் மீது முழுமனதோடு அன்பு செலுத்துங்கள் நம்பிக்கை வையுங்கள். அவர்கள் ஏதேனும் அறியாமல் தவறு செய்தால் அன்பாக பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். சிறுகுழந்தைக்கு சொல்வது போல் உங்கள் துணைக்கு அன்பாக சொல்லி புரிய வைத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.
இப்படி கணவன் மனைவி இடையேயான உறவைதான் வேதம் அழகாக சொல்கிறது.
புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே”
இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது;

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv