தவறான காரணத்திற்காகப் புகழ்பெற்ற தனுஷ் பாடல்! -இளந்தி நடிகர் தனுஷ் எழுதிப் பாடிய “ஒய் திஸ் கொலை வெறிடி” என்ற தமிங்கிலப் பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2011ன் சிறந்த பாடலாக அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் சிஎன்என் தெரிவு செய்து சர்ச்சைக்குக் கூடுதல் அடிகோலியுள்ளது.
வீடியோ காட்சிகளை ஒளியேற்றும் யூரியூப் நிறுவனம், சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அச்சு ஊடகமான ரைம் சஞ்சிகை என்பன இந்தப் பாடலுக்கான கவுரவ விருதையும் சில விமர்சன வரிகளையும் பதிவு செய்துள்ளன.

தனது பங்கிற்கு வழமையாக அமைதி காக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் டில்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததோடு தனுஷ் பாடலுக்கு கவுரவம் வழங்கும் முகமாக விருந்து வழங்கினார்.
இதன் பிறகு இந்தப் பாடலை கூர்மையாக அவதானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. பாடல் வரிகளில் முக்கியமான செய்தி ஒன்றும் இல்லை. அது என்னத்தைச் சொல்கிறது என்று புரியவில்லை. படுமோசமான பிதற்றல் என்று ஒதுக்க வேண்டியுள்ளது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாக முடியுமா என்று எமது முன்னோர்கள் சொல்வார்கள். பேனாவும் கடதாசியும் எடுத்தவனைக் கவிஞன் என்று சொல்ல முடியாது. அனாவசியமாக நடிப்புத் தொழிலை மாத்திரம் பார்க்க வேண்டிய மனிதனைப் பாராட்டிக் கிண்டலடிக்கிறார்கள்.
உலகின் படுமோசமான பாடல் பெற்ற தவறான பிரபலத்திற்கு உதாரணமாக அமெரிக்காவின் 13 வயதுச் சிறுமி றெபெக்கா பிளாக் (Rebecca Black) எழுதிய “ பிறைடே” (குசனையல) என்ற பாடலைக் குறிப்பிட முடியும்.
இது 2011ல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடல். இந்தப் பாடலை ஒருவரும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் சிறுமியின் பெற்றோர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி பாடலை விளம்பரப் படுத்தினார்கள்.
சிறுமி எழுதிப் பாடிய பாடலை தனுசைப் பாராட்டிய அதே ரைம் சஞ்சிகை “வரலாற்றில் படுமோசமான பாடல்” என்று வர்ணித்தது. இந்தச் சிறுமிக்கு வேறு வேலை இல்லையா என்று ஒரு யாகூ (yahoo ) இணையதள விமர்சகர் கேட்டார்.
இப்படி எல்லோரும் இந்தப் பாடலை புரட்டி எடுத்த போது அதற்கு உலகப் புகழ் கிடைத்தது. அதைக் கேட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலருக்கு ஏற்பட்டது. யூரியூப் (YouTube) இணையதளம் மூலம் மாத்திரம் 30 மில்லியன் பேர் இந்தப் பாடலைக் கேட்டனர்.
வித்தியாசமான காரணத்திற்குப் பேரும் புகழும் ஏற்படுவதுண்டு. நடிகர் தனுஷ், சிறுமி றெபெக்கா பிளாக் ஆகியோர் ஒரே மாதிரியானவர்கள். சிறுமி இப்போது படிப்பில் கவனம் செலுத்துகிறார் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தினால் நல்லது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv