சம்பூர் தொடரும் துயரம்-வீடியோ இணைப்பு

திருகோணமலை சம்பூர் பகுதியில் இந்திய சிறிலங்கா கூட்டிணைவில் அமைக்கப்படவுள்ள அனல் மின்நிலையம் காரணமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிய முகாம்களில் வாழ்ந்து வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் சமீபத்தில் அங்கு சென்று நிமைகளை ஆராய்ந்திருந்தார்.இம்மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்கா வரவுள்ள நிலையில் இரா.சம்பந்தனின் சம்பூர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இதனை உறுப்படுத்தும் வகையில் இந்தியாவுடனும் சிறிலங்காவுடனும் சம்பூர் விவகாரம் குறித்து விரிவாக பேசுவதற்று சரியானதொரு வாய்ப்பு கிட்டியுள்ளதாக இரா.சம்பந்தன் அவர்கள்
தெரிவித்துள்ளதாக சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் பிரதிநிதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது அனல் மின் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பகுதியில் 13 குளங்கள் 600 ஏக்கர் வயல் உட்பட மக்களின் குடிமனைப் பகுதிகள் உள்ள நிலையில் மக்களின் குடிமனை பகுதிகள் இல்லா சம்பூர் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் அனல்மின் நிலையத்தை அமைத்துக் கொள்ளலாம் என நலன்புரிச் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாற்று இடமொன்ற இனங்கண்டு இந்தியாவுக்கு தெரிவிப்பதற்கான வாய்ப்பு எட்டியுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நலன்புரிச் சங்க பிரதிநிதி மேலும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் மற்றும் மக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கைரீதியிலனா நிலைப்பாடு தங்களிக் துயருக்கு மருந்தாக நல்ல முடிவினை தரும் என்ற நம்பிக்கையின் குறியீடாகவே இரா.சம்பந்தனின் சம்பூர் வருகையை தாங்கள் நோக்குவதாக நலன்புரிச் சங்க பிரதிநிதி தெரிவித்தார்.

பிபிசி தமிழழோசைப் பதிவு :0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv