என் கண்ணீரின் ரகசியம்


உன் நினைவுகளுக்கும்
துயருறுமென்
இரவுகளுக்கும் மத்தியில்
கண்ணீருடன் பயணப்படுமென்
விழிகளை யாரும்
கண்டு கொள்ள இயலாது..

சொட்டு சொட்டாய்
விழும் கண்ணீரைத்
தொட்டுத் தொட்டு
உலர வைக்கும்
காற்றுக்கு மட்டுமே
என் கண்ணீருக்கான
இரகசியம் தெரியும்..
எதிர்காலம் பற்றிய
எந்தவொரு அச்சமுமற்று
நிகழ்காலத்தில் வாழ்ந்துவிட
ஏங்குமென் மனதின்
அத்துணை துயரங்களையும்
காற்றிலேயே கரைக்கின்றேன்...
யாரிடமும் சொல்லத் தெரியாத
காரணத்தால் காற்றை மட்டும்
அனுமதித்திருக்கிறேன்..
என் கண்களுக்கும்
கனவுகளுக்குமான
நடைபாதைகளில்.....

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv