இன்று கடைசி சந்திரகிரகணம்


இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று (10.12.2011) ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் தெரியும் என்றும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இந்த சந்திரகிரகணத்தை காணலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இன்று  நிகழவுள்ள முழு சந்திரகிரகணத்தை முழுமையாக காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்று மாலை 6 .16 மணி முதல் இரவு 9 .48 மணி வரை சந்திரகிரகணம் நிகழும் என்றும், சரியாக இரவு 8 மணி ஒரு நிமிடத்தின் போது முழு சந்திரகிரகணத்தையும் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை 15 நாள் இடைவெளியில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது. சந்திரகிரணகத்தின் அனைத்துக் கோணங்களையும் பார்க்கும் வகையில் இந்தியா அமைந்துள்ளது.
மேலும் இது ஆண்டின் மையப்பகுதியான ஜுன் மாதம் ஏற்படும் கிரகணத்தைப் போல் இருக்கும் என்றும், கிட்டத்தட்ட 5 மணி நேரம் இந்த சந்திரகிரகணம் நீடிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv