என்றும் ஒரு தகவல்

தாய் நாடு

உலகம் முழுவதும் 'Mother Country ' என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெர்மனியில் மட்டுமே 'Father Country' என்று சொல்கிறார்கள். "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே......." என்று பாரதி சொன்னதற்குரிய சிறப்பான காரணம் ஒன்று உண்டு. "தந்தையர் நாடென்ற பேச்சினிலே......" என்ற வரிக்கு அடுத்ததாக, "ஒரு சக்தி பிறக்குது முச்சினிலே" என்று சொல்லும் பொது ஆண்மை, வீரம்
போன்றவற்றையும் சுட்டி காட்டுகிறார்.ஆண்மை, வீரமும் பொதுவாக ஆண்களுக்கே உரியது. 'தாய்' எனப்படும் போது தாய்மை, அன்பு, பரிவு, கனிவு ஆகியவற்றையே முன் வைக்கப்படும். சக்தி, வீரம், ஆண்மை என்று சொல்லப்படும்போது தான், "தந்தையர் நாடு" என்று குறிப்பிடுகின்றார்.-------------------------------------------------------------------------------------->

வாய் - கண்

வாய்

மற்ற எந்த அவயத்தையும் விட வாய்க்குத்தான் வேலை அதிகம். ருசி பார்ப்பது அதாவது சாப்பிடுவது, பேசுவது என்று அதற்கு இரண்டு காரியம் இருப்பதாலேயே இரண்டையும் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். "வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி" என்கிறபோது சாப்பாடு, பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவது தான் தாத்பர்யம்.


கண்

இதிகாசங்கள் கண்களைச் சிறப்பித்துக் கூறுகின்றன. கடவுளைக் 'கண்' கண்ட தெய்வம் என்று சொல்கிறது. 'கண்' நம் வாழ்க்கைக்கு வழி காட்டியாய் அமைந்திருக்கிறது. திருதராஷ்டிரனுக்கு 100 குழந்தைகள் இருந்தும் ஒருவனைக் கூட நல்வழியில், ஒழுக்க நெறியில் கொண்டு செல்ல அவனால் இயலாமற் போயிற்று. அதற்கு அடிப்படைக் காரணம் அவனுக்குக் கண் இல்லாமை தான். கண் இருந்திருந்தால் அவர்களையும் பாண்டவர்களைப் போல நல்லவர்களாக உருவாக்கியிருக்க முடியும்.---------------------------------------------------------------------------


அமேசான் காடுகள் 

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . அடர்த்தியானதும் இவைதான் . அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் . நதியைச் சூழ்ந்திருக்கும் காடு, சந்தேகமே இல்லாமல் ராஜாதானே ?பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு, 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவுகொண்டது . பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது .

உலகப் பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கின்றன . உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,500 வகைப் பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன .அமேசான் காடுகளை நான்கு தளங்களாகப் பிரிக்கலாம் . மேல் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்தத்தளத்தில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது தளத்தில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன . தரைப் பகுதி பயங்கர காட்டு விலங்குகளுக்கானது . ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).<

>இந்தக் காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள் . அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு, பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6.712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும் !

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv