அன்னை எனும் தெய்வமே

அன்னை எனும் தெய்வமே
ஆலயம் உனக்கில்லையா?
உயிருள்ள தெய்வம் நீ
உண்மைத் தெய்வமும் நீதான்
உணர்வின் ஊற்றாய்
பாசத்தின் உறைவிடமாய்
அன்பினை அகத்தில் வைத்து
அள்ளித் தருவாய் மறுப்பின்றி
நிலவினை காட்டி
நிலாச்சோறு ஊட்டியனாய்
நிலவை விட தூய்மையான – உந்தன்
மனதைக்காட்டி ஊட்டியிருக்கலாமே
அன்பின் வடிவாய் இருந்து
அள்ளி அணைத்தாய் எனையே
அது தந்த சுகத்துக்கு
உலகில் வேறெதுவும் ஈடாகா
உன் மடியினில் உறங்குதல்
உள்ளத்திற்கு சுகத்தை தரும்
உயிருள்ள தெய்வமே
உன் மடி என்றும் வேண்டும் எனக்கு
பிரதியுபகாரம் பாராமல்
என்னோடு துணைநிற்கும் தெய்வமே
உனக்குண்டு கோவில்
என் அகத்தில் என்றும்..0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv