முன்னாள் போராளிகளை கண்டுபிடிக்க அரங்கேறும் சதித்திட்டம் : சனல் 4 ரூபத்தில் உலா வரும் உளவுப்படை


சனல் 4தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் போராட்டத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் சதித்திட்டமொன்று அரங்கேறி வருவதாகவும், இது குறித்து தமிழர்கள் உஷராயிருக்கவேண்டும் எனத் தெரிவித்தும்  இணையத்தளம் செய்தி ஒன்றினை வெளியிட்டிருக்கின்றது.
அதன் விவரம் வருமாறு :

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4 தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வருகின்றது .பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .
இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே. அத்துடன் இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர். இவர்களைக் கைது செய்யும் முகமாக சனல் 4 தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரி செவ்வி கண்டுள்ளது புதிய மர்ம கும்பல் ஒன்று.
இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . இந்த் சம்பவத்தில் முக்கிய சில முன்னாள் போராளிகள் அவர்கள் வசம் சிக்கியுள்ளனர். சனல் 4தொலைகட்சிக்குள் தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களே பல் போர்குற்ற ஆதாரங்களை வழங்கி வருவதாகவும் நம்பும் இலங்கை அரசு தமிழர்களை வைத்து அவர்களே தாம் என கோரி இந்த புதிய குழப்பகரமான நாசகார வேலையினை செய்துள்ளது .இதனை செய்த நபர் பேட்டி காண சென்ற நபர் தமிழக தலைவர்களை தமது பிடிக்குள்வைத்திருக்கும் நபர் என்றும் கண்டறியபட்டுள்ளது .
இவர்களின் பின்னால் பெரிய புலனாய்வு சூழ்ச்சி திட்டம் ஒன்று அரங்கேறிவந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
எனவே இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாம் சனல் 4 தொலை காட்சி எனகோரி யராவது வந்து உங்களுடன் செவ்வி காண முற்பட்டால் உடன் பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் காரியாலயத்திற்கு அழைத்து இவர்கள் தான் அவர்களா என உறுதிப்படுத்திய பின் உங்களது செவ்விகளை வழங்குங்கள் என தயவு கூர்ந்து தெரிவித்து கொள்கின்றோம் .
Telephone: 0044- 207 306 8444, Telephone 0044-20 7396 4444 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.
உங்கள் உயிர் காத்து தப்பி வந்த நீங்கள் இந்த புதிதாக உருவாக்கபட்டு வழிநடத்த பட்டு வரும் புதிய மர்ம கும்பல்களிற்குள் சிக்கி சீரழிந்துபோகாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் .
இந்த செய்தியினை அனைத்து ஊடகங்களும் பர பட்சம் இன்றி தங்கள் ஊடகங்களிலும்வெளியிட்டு உதவுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv