கண்பார்வையை அதிகரிக்கும் மென்பொருள்

iPhone மற்றும் கணணியைப் அதிக நேரம் பார்ப்பதால் ஒருவரது கண்பார்வை பாதிக்கப்படும் என்பது பொதுவாக நாம் அறிந்த விடயம். ஆனால் மாறாக அவை ஒருவரது கண் பார்வை முன்னேற்றத்திற்கு உதவும் என்பது நம்மில் அநேகரை ஆச்சரியப்பட வைக்கின்றது.
நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சியாக மென்பொருள் அமையும் என கூறப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கு மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்கமுடிகின்றது என்றும், ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசியின் மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணணிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansi னால் உருவாக்கப்படுகின்றது. இதில் முதலில் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும். அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல பிம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோடிட்ட வடிவங்களாகவும் இருக்கும்.
இதன் இலக்கு வெற்றிடமான இடங்களைத் தெரிந்தெடுத்து அதில் அந்த வட்டதை வைப்பதுதான். ஒருவர் நன்றாகச் செயற்பட செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தப் பரிசோதனை ஆராய்ச்சியில் சராசரி 51 வயதானவர்கள் சுமார் 40 பாடங்களில் பங்குபெற்றனர்.
முதல் 3 மாதங்களுக்கு இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந் நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் வீதம் 15 நிமிடம் ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படும். அதன்பின்னர் இவை மாதாந்திரக் கட்டணமாக மாறும். பிரித்தானியர்கள் வழமையாக ஒரு வருடத்தில் கட்பார்வை உற்பத்திக்காக 2.7 பில்லியன் பவுண்களைச் செலவழிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv