வந்துவிடு என் பூவே!..


நேற்றைய நினைவுகளில்
விழிகள் கசியும்
இரவுகள் எல்லாம்
பகல்களாய் கழியும்
தொண்டைக் குழிக்குள்
சிக்கிய வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்  ஒவ்வொன்றாய்
என் கண்ணீர்த் துளிகள்
மௌனமாய்க் கரையும்

வாழ்க்கை அர்த்தமிழக்கும்
மீண்டும் மீண்டும்
உதடுகள் உச்சரிக்கும்
மின்னல் ஒன்று
என்னை எச்சரிக்கும்
அவள் வருவாளா
கேள்விக்குறியாய் என்னுள்
எத்தனை பசுமைகள்
இன்று விருட்சமாய்

வெட்டிவிடு என்றாய்
வேருடனா?
மறந்துவிடு என்றாய்
மரித்திடவா?
நினைத்தால் தானே மறப்பதற்கு
என் நினைவே நீயல்லவா
மரணித்துக் கிடந்த
என் இதயம்
உன்னால் தான் ஜனிக்கப்பட்டது
எனவே
வந்துவிடு என் பூவே!..        
                                       ,,,,,,,,மகிழ் ,,,,,,,

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv