விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்லை - சம்பந்தன் எம்.பி (காணொளி இணைப்பு)

போரின் இறுதிக்காலப்பகுதியில் என்ன நடைபெற்றது என்பது பற்றிய உண்மை முழுமையாக அறியப்பட வேண்டும் என்பதை மேற்குல நாடுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வீரகேசரி இணையத் தளத்திற்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

~~இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான, நிதானமான நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு தீர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கத்தினுடைய அசமந்தப்போக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற தாமதம் உட்பட பல விடயங்கள் பற்றியும் நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் இந்தப் பேட்டியின் போது குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு வந்திருக்கும் நிலையில், இந்த விஜயங்களின் போது தாம் நடத்திய பேச்சுவார்த்தைகள், அதன் பலன்கள் மற்றும் அரசாங்கத்துடன் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கியுளள பேட்டியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: மேற்குலக நாடுகளுக்கு அண்மையில் நீங்கள் மேற்கொண்ட விஜயத்தின் பலாபலன்கள் எவ்வாறுள்ளன என்று கூறமுடியுமா?
பதில்: அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளரின் அழைப்பின் பேரிலேயே நாம் அமெரிக்கா சென்றோம். அங்கே பல உயர் அதிகாரிகளைச் சந்தித்தோம். பல சட்டசபை உறுப்பினர்கள் அதாவது காங்கிரஸ், செனற் ஆகிய இரு சட்டசபை உறுப்பினர்கள், பல மனித உரிமை நிறுவனங்கள் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து தற்போது இலங்கை நிலைமைகள் சம்பந்தமாக, விஷேடமாக போர் நடத்தப்பட்ட பொழுது இடம்பெற்ற சம்பவங்கள் சம்பந்தமாக தெளிவாக எடுத்துக் கூறினோம்.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் நீண்டகாலமாக, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவு காணப்படாவிட்டால் இதற்கு பின்னரும் வன்முறை தொடரக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
யுத்தத்தால் குடிபெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களுடைய மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டு வசதி, தொழில் வாய்ப்பு ஏனைய அத்தியாவசியத் தேவைகள் இவற்றை நிறைவேற்;றுவதில் தற்போது தாமதங்கள் இருந்து வருகின்றன.

இவை தொடர்பில் அரசாங்கத்திடம் ஆர்வமற்ற நிலைமைகளே காணப்படுகின்றன. அதே சமயத்தில் தற்போது வடக்கு, கிழக்கில் அதிகரித்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றன. 

புதிய இராணுவ முகாம்கள் அமைத்தல், இராணுவத்தினருக்கு செய்யப்படுகின்ற வதிவிட ஒழுங்குகள், இராணுவத் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படுகின்ற காணிகள், அபிவிருத்தி என்ற போர்வையில் எடுக்கப்பட்டு அந்தக் காணிகள் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் எமது மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வாழ்க்கையை ஆரம்பிக்கவோ அல்லது தமது தொழிலை ஆரம்பிக்கவோ முடியாத நிலையில் இருக்கின்றனர். 

இவ்விதமாக பல காணிகளை ஒன்றில் இராணுவம் அவற்றை கையாண்டு வருவதையும் அல்லது பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது இருக்கின்ற காரணத்தின் நிமித்தம் எமது மக்கள் திரும்பிப் பெற முடியாத நிலைமையும் இருக்கின்றது. 

பெருபான்மை இனத்தவர்களுக்கு விவசாயம், கடற்தொழில் சம்பந்தமாக அரசாங்கத்தால் வழி வகை செய்து கொடுக்கப்படுகின்றது. தமிழர்களின் சொத்துக்களை மீறியே அந்த வழிவகைகள் செய்யப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் உள்ள இன விகிதாசாரத்தை மாற்றி கூடுதலாகப் பெரும்பான்மை இனத்தவர்களுடைய பிரசன்னத்தைப் பிரதிபலிக்க கூடிய வகையில் அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.

மொழி, கலாசார ரீதியாக வடக்கு, கிழக்கினுடைய தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு அரசாங்கத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்ல அங்கு அழிக்கப்பட்ட இந்து ஆலயங்கள் பல நூற்றாண்டுகளாக பரம்பரையாக நாங்கள் பயன்படுத்தி வந்த சில சமய கலாசார வசதிகள் போன்றவற்றை நாங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாதவாறு தற்போது ஆக்கிரமிப்பு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. 

அரசியல் தீர்வை பொறுத்தவரையில் ஒரு நியாயமான, நிதானமான நடைமுறைப்படுத்தக் கூடிய ஓர் அரசியல் தீர்வைக் காண்பதில் அரசாங்கத்தினுடைய அசமந்தப்போக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற தாமதம் உட்பட பல விடயங்கள் பற்றியும் நாங்கள் அவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.

நாங்கள் கூறிய விடயங்களை மிகவும் கவனமாக அவர்கள் செவிமடுத்துக் கொண்டார்கள். எங்களுடைய பயணம் ஒரு மிகவும் பிரயோசனம்மிக்க பயணமாக அமைந்தது என்றே நாம் கருதுகின்றோம். நாம் வொஷிங்டனில் இராஜாங்க அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் சட்டசபை அதிகாரிகள் உட்பட வேறு பலரையும் சந்தித்தோம்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையினுடைய அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச்செயலாளர் நாயகத்தையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

அதேவிதமாக ஒட்டாவாவில் எமது பிரதிநிதிகள், அரசாங்கத் தரப்பினரைச் சந்தித்து இது விடயம் சம்பந்தமாக உரையாடினோம். திரும்பி வரும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுக்கு எமது கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

புலம்பெயர்ந்த சகோதரர்களையும் சந்தித்து அவர்களுக்கு தற்போது இலங்கையில் இடம்பெறுகின்ற நிலைமைகள், எங்களால் எடுக்கப்படுகின்ற முயற்சிகள், எமது மக்களின் உண்மையான நிலைவரங்கள் தொடர்பில் நாங்கள் அவர்;களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

எமது வெளிநாட்டு விஜயத்தை நாங்கள் அவசரமாக மேற்கொண்டிருந்தாலும் கூட பலருடைய உதவிகளின் மூலமாக செய்யப்பட்ட ஒழுங்குகளின் படி மிகவும் திருப்திகரமாக நடைபெற்றது என்றே நான் கருதுகின்றேன். 

எமது விஜயத்தின்போது, நாங்கள் அவர்களுக்குக் கூறிய விடயங்களின் அடிப்படையில் பிரதிபலிப்புகள் எதிர்காலத்தில் நல்லவிதமாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
------------------------------

கேள்வி: உங்களுடைய இந்த விஜயத்தின் போது நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் அவர்களின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?
பதில்: அவர்கள், நாங்கள் சொன்ன கருத்துக்களை மிகவும் கவனமாக செவிமடுத்தது மாத்திரம் அன்றி மேலதிகமாக கேட்ட கேள்விகளிலிருந்தும் அதற்கு அவர்கள் சொன்ன பதில்களிலிருந்தும் பெரும்பாலாக எமது கருத்துக்களை அவர்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அந்த அடிப்படையில் தங்களுடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்ற கருத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் அவர்களுடைய பதிலும் இருந்ததை நான் அவதானித்தேன்.
உண்மை முழுமையாக அறியப்பட வேண்டும் என்பதே நாங்கள் விஷேடமாக அவர்களுக்குக் கூறிய விடயம். உண்மையை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் தான் எதையும் சாதிக்க வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
அவர்களுடைய பதில் எம்மைப் பொறுத்த வரையில் திருப்திகரமாக இருந்தது. நாங்கள் திருப்தி அடைய முடியாத ஒரு சந்தர்ப்பம் கூட இருக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
கேள்வி:உங்களுடைய இந்த வெளிநாடுகளுக்கான விஜயங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள், குறிப்பாக சிங்களத் தேசியவாத அமைப்புக்களிடமிருந்து கிளம்பியிருந்தது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்: அதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அது அவர்களுடைய கருத்து. இன்று இலங்கையில் ஒரு பிரச்சினை இருக்கின்றது என்றால் அது தமிழ் மக்களுடைய பிரச்சினைதான்.
இந்தப் பிரச்சினை சம்பந்தமாக பேசுவதற்கு அரசாங்கப் பிரதிநிதிகள் எல்லா நாடுகளுக்கும் செல்கின்றார்கள். அரசாங்கத்தினுடைய கருத்தைக் கூறுகின்றார்கள்.
நாங்கள் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உண்மையான பிரதிநிதிகள். அந்த அடிப்படையில் உலகத்தில் எந்த இடத்துக்கும் சென்று எமது மக்கள் சார்பில் எமது மக்களினுடைய நிலைமையை விளக்க வேண்டிய ஒரு கடமைப்பாடு எங்களுக்கு இருக்கின்றது.
அந்தக் கடமையில் இருந்து நாம் தவற முடியாது. அதனை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்தக் கடமையை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். மற்றவர்கள் தங்களுடைய குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் சில கருத்துக்களைக் கூறுகின்றார்கள் என்ற காரணத்துக்காக எமது கடமையில் இருந்து விலக முடியாது.
கேள்வி: தமிழ் மக்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தையை இவ்வளவு காலமாக இந்தியாவுடன் மேற்கொண்ட நீங்கள் முதன்முறையாக பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ளீர்கள். இது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?
பதில்: அமெரிக்காவுடன் நாங்கள் இதற்கு முன் தொடர்பு வைக்கவில்லை என்று கூற முடியாது. அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தை விடயமாக செல்லாவிட்டாலும் வேறு விடயமாக சென்றிருக்கின்றோம். அந்தச் சந்தர்ப்பத்தில் நாங்கள் சந்திக்க கூடியவர்களை சந்தித்துள்ளோம்.
இந்தியா எங்களுடைய அயல் நாடு. நீண்டகாலமாக எமது கருமத்தில் அக்கறை காட்டி வந்த நாடு.
அந்த வகையில் கூடுதலாக இந்தியாவிற்கு செல்வது வழமை. அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால், நாங்கள் அமெரிக்கா செல்கின்ற விடயத்தை இந்தியாவிற்கு கூறியிருக்கின்றோம். அது அவர்களுக்குத் தெரியும்.
நாங்கள் அமெரிக்காவில் நடந்த விடயங்கள் பற்றியும் கூறியிருகி;ன்றோம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தமிழ் மக்களின் நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒன்றாக செயற்பட வேண்டும் என்பது எமது விருப்பம். அவர்கள் தற்போது எமது விடயத்தில் கருத்துக்களைப் பரிமாறி ஒற்றுமையுடன் செயற்படுகின்றார்கள் என்பது தான் எமது அவதானிப்பு.
அதுதான் நாங்கள் அமெரிக்காவிற்கு சென்ற காரணத்தால் இந்தியாவைப் பொறுத்தவரையில் எதுவும் கருத்து வேறுபாடோ அல்லது ஏதும் மாற்றம் இருக்குமோ என்று நினைக்க வேண்டியதில்லை. நாங்கள் இரண்டு நாடுகளுடனும் ஏனைய சர்வதேச சமூகத்துடனும் சேர்ந்து எமது மக்களுடைய துயரங்களைத் தீர்ப்பதற்கு செயற்படுவோம்.
கேள்வி: உங்களுடைய இந்த விஜயத்தின்போது புலம்பெயர்ந்துள்ள தமிழர்களையும் சந்தித்திருந்தீர்கள். அந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: ஆம். நிச்சயமாக. புலம்பெயர்ந்த மக்களை நாங்கள் பெரியளவில் சந்தித்தோம் .வொஷிங்டன், டொரன்டோ ஆகிய இடங்களில் எமது மக்களைச் சந்தித்தோம். நாங்கள் அங்கு சென்றிருந்தபோது ஐயப்பன் கோவில் மண்டபத்தில் பெரியளவில் கூட்டமொன்று நடைபெற்றது.
அங்கு பெருமளவான மக்கள் வந்திருந்தார்கள். மண்டபம் நிரம்பியிருந்தது. அன்றிரவு விருந்து உபசாரம் நடைபெற்றது. அதில் மிகக் கூடுதலாக மக்கள் வந்திருந்தார்கள்.
அதேபோல் ஐக்கிய இராச்சியத்திலும் கூட ஒரு மதியபோசன விருந்தின் போது ஒரு பெரிய மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது அதிலும் பெரும் எண்ணிக்கையிலானோர்; கலந்துகொண்டனர்.
இலங்கையில் உள்ள தற்போதைய நிலைமைகள் பற்றி நாங்கள் அவர்களுக்குத் தெளிவாகக் கூறினோம். அவர்களும் பல கேள்விகளைக் கேட்டார்கள். அந்தக் கேள்விகளுக்கும் நாம் பதில் கூறினோம். எங்களுடைய தற்போதைய போக்குகளை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
நாங்கள் நிதானமாக செயற்பட்டு ஒரு நியாயமான, எமது மக்களுடைய நீண்ட கால அபிலாஷைகளுக்கு ஒரு தீர்வைக் காணக்கூடிய வகையில் நிலைத்து நிற்கக் கூடிய நடைமுறைப்படுத்தக்கூடிய ஓர் அரசியல் தீர்வைக் காண வேண்டியது இன்றைய அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. அவர்களில் மிகவும் கூடுதலான மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பது தான் எனது நம்பிக்கை.
கேள்வி: இலங்கை அரசாங்கத்துடன் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையையும் முடித்துள்ளீர்கள் இப்பேச்சுவார்த்தைக்கு ஏதும் காலக்கெடு விதித்துள்ளீர்களா?
பதில்: அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில், துரதிஷ்டவசமாக தை – ஆவணி மாதத்திற்கிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் நாங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையவில்லை.
எங்களுடைய நிலைப்பாடு சம்பந்தமாக நாம் கூறியிருந்த போதிலும், அரசாங்கத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக எமக்கு இன்னும் கூறப்படவில்லை. ஆவணி மாதத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு எமக்கு அறிவிக்கப்படும் வரையில் நாங்கள் அதை நிறுத்தி வைத்திருந்தோம்.
ஆனால், பின்னர் ஜனாதிபதிக்கும் எமக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியல் தீர்வு சம்பந்தமாக இதற்கு முன் இடம்பெற்ற நிலைமைகளைக் கூறி பல விதமான அறிக்கைகள், பல விதமான நிபுணர் குழு சிபார்சுகள், பல விதமான முடிவுகள் எடுக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஆனால், நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த பல விடயங்களை நாங்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
அந்த அறிக்கைகள், சிபார்சுகள், முடிவுகள் தற்போது பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. கடைசியாக 16 ஆம் திகதி அரசாங்கத்துக்கும் எங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, எதிர்வரும் பேச்சுவார்த்தைகளின் போது நாங்கள் பேச வேண்டிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தயாரித்திருக்கின்றோம்.
ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறான விதமாக அமைய வேண்டும், மத்திய அரசாங்கத்துக்கும் பிராந்திய அரசுக்குமிடையில் அதிகாரங்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும். வரி ஒழுங்குகள், நிதி ஒழுங்குகள் இவ்விதமான கருமத்ததையும் ஒரு பட்டியல் இட்ட நாங்கள் விபரமாகப் பேச வேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றோம். இறுதியில் பேச்சுவார்த்தை எவ்வாறு நடைபெறும் என்று கூறமுடியாது.
ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் நிதானமாகவும் உறுதியுடனும் செயற்படுகின்றோம் என்றே கூறவேண்டும்.
ஏனென்றால் இந்தப் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கு தமிழ்த்தரப்பு மிகவும் பக்குவமாக மிகவும் நிதானமாக செயற்பட்டது என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டிய ஒரு தேவை எமக்கு இருக்கின்றது.
எமது மக்கள் சார்பில் தங்களது பிரதிநிதிகள் பிரச்சினையை சமாதானமாக தீர்த்துக்கொள்வதற்கு எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுத்தார்கள் என்ற பலம் மக்களுக்கு சேர வேண்டும்.
ஆதலால் அதை அடைவதற்கு இந்தப்பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாக செயற்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம் .
நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv