பிரித்தானியாவில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடிய தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு.காணொளி இணைப்பு.


பிரித்தானியாவில் 27.11.2011 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.
முருகதாசன் நினைவுத் திடலில் மதியம் 12:30 மணிக்கு ஈகைச்சுடரேற்றலோடு ஆரம்பமான  இத் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில்  ஈகைப்பேரொளி முருகதாசின் தாயார் திருமதி. வர்ணகுலசிங்கம் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தாயக விடுதலைக்காக தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள், மற்றும் அன்நிய சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும், மண்மீதும், மொழிமீதும் பற்றுக்கொண்டு அதற்காகப் பணிசெய்து உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்களுக்காகவும், தமிழ்ர்களின் விடுதலைக்காக ஆசிய ஐரோப்பிய நாடுகளில் வேழ்வித் தீ ஆகிய தியாகிகளுக்காகவும், சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட தாய்த் தமிழக உறவுகளுக்க்ஆகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கத்தினை தொடர்ந்து 12:35 மணிக்கு (தாயக நேரம் பிற்பகல் 6:05மணி) பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவியுமான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்த்அரம் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து துயிலுமில்ல பாடல் அகன்ற திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்க்அ நிகழ்வுகளும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றது.
தாயகத்தில் மாவீரர்களை விதைத்த துயிலுமில்லங்களைப் போன்று அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளில் மக்கள் வரிசையாக வந்து மலர்வணக்கம் செலுத்தினர்.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான கார்த்திகை மலர்களையும், தீபம் ஏற்றுவதற்கான சிட்டிகளும்  ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்யாது மக்களுக்கு வழங்கியதும், அம் மலர்களை மக்கள் கல்லறைகளில் வைத்து வணங்கிய பின் கார்த்திகை மலர்க் குவியலின் நடுவே கல்லறைகள் மிடுக்குடன் காட்சியளித்தமை அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மைக்கோனால்ட், விரேந்திர சர்மா, யூலியன் பெல், றோபேட் இவான்ஸ், மற்றும் DR. ஒண்கார் சஹோத்தா, ACT NOW தொண்டு நிறுவனத்தின்  இயக்குனர் திரு. ரிம் மார்ட்டின் உட்பட பிரித்தானியத் தமிழ்ர் பேரவையின் Chairman திரு. நல்லைநாதன் சுகந்தகுமார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் மாவீரர் குடும்பனலன் பேணல் அமைச்சர் திரு. உருத்திராபதி சேகர்,  பிரித்தானிய தமிழ் இளையோர்அமைப்பின் ஆரம்ப உறுப்பினரும், தேசிய நினைவேந்தல் அகவத்தின் இளையோர் பிரதினிதியுமான திரு. ஜெயந்தன், பிரித்தானியத் தமிழ் இளையோர் சார்பில் திரு. யாத்திரா, விசாலி விஜயதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரை ஆற்றியிருந்தனர். அத்தோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்களினால் விடுக்கப்பட்டிருந்த அறிக்கையினை வெளிவிவகார அமைச்சர் திரு. தணிகாசலம் தயாபரன் அவர்கள் வாசித்தார்.


மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டு தாயக உணர்வுகளையும், நினைவுகளையும் மீள நினைவூட்டும் விதமாக முருகதாசன் நினைவுத் திடலில் அமைந்த இந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் மக்களின் மனங்களில் புத்துணர்ச்சியையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் நிலவிவந்த அவனம்பிக்கைகளுக்கும், குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந் நிகழ்வு நடைபெற்றிருந்தது.  பல குழப்பங்களுக்கு மத்தியில் இம்முறை மாவீரர் தினம் நடக்குமா…? என்ற ஏக்கத்தோடு   கண்களில் நீரோடும், மனங்களில் வேதனையோடும் இருந்த மக்களின் மனங்களில் நேற்றைய தினம் முருகதாசன் நினைவுத் திடலில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வும், ஒழுங்கமைப்புகளும் மக்களுக்கு புதியதோர் செய்தியை சொல்லியுள்ளதொடு அவர்களின் முகங்களில் புன்னகையையும், தெளிவும் காணப்பட்டதை அவதானிக்கமுடிந்தது.
அத்தோடு அங்கு திரண்டிருந்த மக்கள் தம்மால் ஆன பங்களிப்புக்களை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பங்களிப்பு பெட்டிகளில் இட்டுசென்றதையும் காணமுடிந்தது.
இந்த நிகழ்வில் தாயக வெளியீடுகளும், தாயக உணவகத்தின் உணவுகளும் விற்பனைசெய்யப்பட்டது. இதில் தேசியத் தலைவரின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்ட தமிழ்த் தாய் நாட்காட்டிகளை அனைத்து மக்களும் வாங்கிச் சென்றதையும் காணமுடிந்தது.
இப்படியான உணர்வுபூர்வமான மாவீரர் தினம் நடக்குமா என்ற கேள்வி பெரும்பாலான மக்கள் மனங்களில் இருந்தமையால் இம்முறை தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான பங்களிப்புக்களை வர்த்தக நிலையங்களும், மக்களும் தவிர்த்திருன்தமையால் பெரும் நிதிச்சுமையோடு எவ்வாறெனினும் மாவீரர்களுக்கான நிகழ்வு சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும் நடக்கவேண்டும் என்ற நோக்கோடு தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நடாத்திமுடித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்தொடு தடைகளும் இடர்களும் வந்தபோதும் அத்தனையும் தாண்டி இந்த நிகழ்வை சிறப்பாக நடாத்திமுடிக்க அல்லும் பகலும் பணிசெய்த கலைஞர்கள், பணியாளர்கள் மற்றும் மக்களுக்கும் இத் தேசிய நினைவெழுச்சி நாளை சிறப்புற நடாத்தி முடிக்க காலம் அறிந்து  கடமை உணர்வோடு ஊடக ஒத்துழைப்பு நல்கிய ஊடகங்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்ட தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினர் இப் பாரிய நிகழ்வை நடாத்தி முடிப்பதற்கு செலவான பெருந்தொகை நிதியில் மக்களும் பங்குகொண்டு பங்களிப்புக்களை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv