நெருப்பு விரல்


மனிதா
 இரு விரல்களிடையே
 ஒரு கை தீ பந்தம்,,,,,

உன்
உயிர் 
பயணத்தை
உறிஞ்சும்
ஓர்
உறிஞ்சு குழாய் ,,


எமனின் கைக்கு 
உன்னை ஒப்படைக்கும்
ஒரு
புகைச் சங்கிலி,,,,,,

நோய்களின்
பெயர்களை
தாங்கி நிற்கும்
இந்த சிகரட்டால்
உனக்கென்ன பயன் ,,,

இது உன்னை
தொலைப்பதட்கான 
உனது 
கண்டுபிடிப்பு ,,,

இதற்காக நீ
இழுத்துவிடும்
மூச்சு
உன் இறுதி 
மூச்சுக்கான
எச்சரிக்கை
என்பதை
ஒரு கணமும் 
மறந்து விடாதே,,,

                           ms.saifurrahman

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv