வாராந்தப் பழமொழிகள்

01. என்னை எரிச்சலூட்டும் அற்ப விஷயங்களைநேற்று நான் தொலைத்துவிட்டேன்..

மறைந்து போகும் முட்டாள்தனமான பழக்கங்களை
நான் தூக்கி எறிந்துவிட்டேன்.
கெட்ட எண்ணங்கள் ஒழிந்து நல்ல எண்ணங்கள்
பிறக்கும் வயல் வெளியில் நடக்கிறேன் – கவிதை.
02. அடுத்தவர் வாழ்வோடு ஒப்பிடாமல் உங்கள் வாழ்வை அனுபவியுங்கள். தங்களிடம் என்ன இருக்கிறது என்பதல்ல அடுத்தவரிடம் அதிகமாக இருப்பதுதான் இன்று பலருக்கு பிரச்சனையாக உள்ளது. அதே பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் தாமதிக்காது அதை அழித்துவிடுங்கள்.
03. ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்கு சொல்ல வேண்டிய விடயங்கள் :
அ. அடுத்தவனிடம் எவ்வளவு செல்வங்கள் அதிகாரங்கள் இருந்தாலும் அதில் எனக்கு ஆர்வமில்லை.
ஆ. என் குடும்பத்திற்கும் எனக்கும் தேவையான பாதுகாப்பும், கௌரவமும் சம்பாதித்தால் போதுமானது.
இ. காற்றைத் துரத்தி கஷ்டப்பட்டு என் அமைதியை குலைக்கமாட்டேன்.
ஈ. மற்றவரிடம் என்ன இருக்கிறது என்று ஒப்பிடும் மாயச் சூழலில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வேன்.
04. மாமேதைகள் சாகா வரம் பெற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு உங்கள் ஆற்றலை அழித்துக் கொள்ள வேண்டாம்.
05. அதிகமானவர்கள் வீடுகள், கார்கள், குளிர்சாதனப் பெட்டி, பங்குப் பத்திரங்கள் என்று தங்கமாடு பிடிப்பதற்கு அலைந்தே இறந்து போகிறார்கள். இப்படி ஓடுவதை விட தன் உண்மையான சாதனைகளின் திருப்தியோடு இருந்தால் அதுவே பெரிய விடயம்.
06. நமக்கு சொந்தமான சுய அறிவுடன் நாமே தேர்ந்தெடுத்த இலட்சியங்களை அடைய நம் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட வேண்டும். அதைவிடுத்து குழந்தைத்தனமான போட்டா போட்டிகளை பலவந்தமாக நம்மீது திணிக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு விடயத்தையும் சிறு பிள்ளைத்தனமாக மானப் பிரச்சனை என்ற இடத்திற்குள் நகர்த்தக்கூடாது.
07. எல்லா இலட்சியங்களின் இறுதி இலக்கும் குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பதுதான்.
08. எல்லா உறவுகளிலும் வீட்டிலும் குடும்பத்திலும் உள்ள உறவுதான் அதிக முக்கியமானவை. காதலும், கல்யாணமும், பெற்றோராக இருக்கும் குடும்ப உறவுகளில் உள்ள சந்தோஷங்கள்தான் வாழ்வின் சிறந்தவற்றுக்கெல்லாம் அடிப்படையானவை, உன்னதமானவை.
09. உன்னுடைய வீடுதான் உன்னுடைய சாம்ராஜ்ஜியம், அதைவிட அதிக சந்தோஷம் தரும் இடம் வேறு எதுவும் கிடையாது என்று சிசரோ 2000 ம் வருடங்களுக்கு முன் கூறினான்.
10. தன் சொந்த வீட்டில் அமைதியைக் காண்பவன்தான் இருப்பதிலேயே சந்தோஷமான மனிதன் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன் கதே எழுதினான்.
11. சந்தேஷமான வீடே அமைதியான வீடு.. கலையில் உயர்ந்த கலை ஒன்றாய் வாழும் கலைதான் என்று வில்லியம் லயன் பெல்ஸ் கூறுகிறார்.
12. நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால் நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள் அதுவே தங்க விதி என்று பெஞ்சமின் பிராங்கிளின் சொல்கிறார்.
13. நீங்கள் நேசிக்கப்பட ஒரே வழி கேட்பதை நிறுத்திவிட்டு அதைக் கொடுக்க ஆரம்பிப்பதுதான்.
14. ஒருவரை நேசிப்பதற்குரிய வசனங்கள் : நான் உன்னை எப்படி காதலிக்கிறேன்..? இதோ அந்த வழிகளை எண்ணுகிறேன். என் ஆன்மாவால் அடையக்கூடிய ஆழத்திலும், அகலத்திலும், உயரத்திலும் உன்னைக் காண்கிறேன்.
15. காதலிக்காமல் போவதைவிட காதலித்து தொலைந்து போவது மேல்.
16. காதல் மரணம் போல் வலிமையானது, பல தண்ணீர் சேர்ந்தும் காதலை தணிக்க முடியாது. வெள்ளத்தால் அதை மூழ்கடிக்க முடியாது.
17. காதலிக்கும் இருவர் இருக்குமிடம் தேவாலயத்தைவிட புனிதமானது.
18. ஒருத்தி ஒருவனைக் காதலித்தால் ஒருவன் ஒருத்தியைக் காதலித்தால் தேவர்கள் விண்ணுலகைவிட்டு அந்த வீட்டுக்கு வந்து சந்தோஷப்படுவார்கள்.
19. இன்னொரு உயிருடன் உறவு கொண்டு, வருடங்கள் செல்லச் செல்ல அதில் ஆழம், அழகு, சந்தோஷம் பெருகுவதுதான் வாழ்விலே உன்னதமானது. காதல் என்பது ஒரு தெய்வீகச் செயல்.
20. அவள் கண்களில் மின்னிய அன்பிலும் முதல் காதலிலும் சந்தோஷத்தைக் கண்டேன்.
21. மறுமலர்ச்சி என்பது தெருவில் இருந்து ஆரம்பிப்பதல்ல உன் வீட்டில் இருந்து ஆரம்பிப்பது.
22. அன்பு இல்லாமல் வாழ்வின் நீடித்த சந்தோஷம் சாத்தியமில்லை. வெற்றிகரமான திருமண வாழ்வும், நல்ல குடும்ப வாழ்வும் இல்லாமல் வாழ்வின் உயர்ந்த நோக்கத்தில் முழுமை காண முடியாது.
23. கடவுள் ஓர் உயர்ந்த நோக்குடன்தான் இருவரை இணைத்து வைக்கிறார் அதை தாழ்வாகக் கருத வேண்டாம்.
24. ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது பல யுகங்கள் வாழும் இன்பத்திற்கு ஈடானது. மண்ணுலகில் சுவர்க்கம் இருக்குமானால் அது அந்த ஒரு மணி நேரம்தான்.
25. சரியான ஜோடியை தேர்ந்தெடுப்பது முக்கியமல்ல சரியான ஜோடியாக இருப்பதுதான் முக்கியம்.
26. திருமணம் வேருள்ளது வளர்ந்து பூ பூக்க வல்லது அதை விசுவாசமாகக் கவனிக்க வேண்டும்.
27. இருவரும் பரஸ்பர முயற்சி செய்யாவிட்டால் ஒரு நாள் நம்பிக்கையோடு ஆரம்பித்த திருமணம் திடீரென உதிர்ந்து போய்விடும்.
28. உலகின் உயர்ந்த சந்தோஷம் திருமணத்தில்தான் இருக்கிறது. வேறு எதில் தோற்றாலும் சந்தோஷமான திருமண வாழ்வில் இருப்பவன் ஒரு வெற்றிகரமான மனிதனே.
29. இறுதியில் இரண்டே விஷயங்கள்தான் ஒரு மனிதனுக்கு முக்கியம், ஒன்று அவனுடைய குடும்பத்தாரின் அன்பு இரண்டு புரிந்து கொள்ளப்படல்.
30. குடும்பம்தான் நீடித்திருக்கும் நங்கூரம், குடும்பம்தான் பாதுகாப்பான துறை முகம்.
31. உங்களுக்கு வாய்ப்புக்கள் வரும்போது அங்கு போகவிடாது தடுப்பவர்கள்

அதுபோல வாய்ப்புக்களை உங்களுக்கு ஏற்படுத்தித் தரக்கூடியவர்களா என்று அவதானித்துப்பாருங்கள். மற்றவர்களுக்கு புதிய வாய்ப்புக்களை தர மனமுள்ள ஒருவன் ஒரு காலமும் மற்றவர் அடையவுள்ள நல்ல வாய்ப்புக்களுக்கு தடைபோடமாட்டான். வாய்ப்புத்தர மனமில்லாத தீயவர்களே தடுக்கிறார்கள்… முடியாவிட்டால் பகிஷ்கரிக்கிறார்கள்.
Written by Thurai ·

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv