கிறீஸ் வரும் முன்னே! பொலிஸ் வரும் பின்னே!!

கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியொன்று இன்று காலை 11.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது.


பல்கலைக்கழக அனைத்து பீட தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களும் எதிர்ப்புப் பதாகைகளைத் தாங்கியவாறு, தமது வாய்களைக் கறுப்புத் துணியினால் கட்டி அமைதியான முறையில் இப்பேரணியில் பங்குபற்றினர்.

கிரீஸ் மனித செயற்பாட்டைக் கண்டிக்கும் வகையில் 'கிறீஸ் வரும் முன்னே ! பொலிஸ் வரும் பின்னே!!" , 'கிறிமினலைப் பிடிப்பர் மக்கள் - அதை விடுவர் பொலிஸார்", 'மனித உரிமை அமைப்புக்களே! சமூகப் பிரதிநிதிகளே!! உங்கள் மனங்கள் என்ன மரணித்து விட்டனவா?", 'அரசே! யார் இந்த மர்ம மனிதர்கள் தமிழர்கள் என்ன விளையாட்டுப் பொம்மைகளா?", 'பெண்ணியம் மீது கண்ணியமற்ற முறையில் பண்பாட்டைச் சீரழிக்காதே!", 'இறுதி எச்சரிக்கை! தமிழ் பேசும் பெண்களின் புனிதத்தைக் கெடுக்காதே!" போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு இந்தப் பேரணியில் பங்குபற்றினர். இந் நிகழ்வில் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பலர் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv