கஞ்சிக்கும் வழியில்லாமல் கஷ்டப்படும் மக்கள் இருக்கையில் இது தேவையா எமக்கு ?

ஒரு சிலரின் உதாசீன நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த இனமும் துர்ப்பெயருக்கு ஆளாகும் நிலை, இதற்கு சிறந்த உதாரணம் இந்த செய்தி.


சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு
குறையவில்லை, வந்தோமா படத்தை பார்த்தோமா என்றில்லாமல் சில கொரில்லாக்களின் செயற்பாடுகள் பலரையும் ஒருகணம் நிமிரவைத்தது.தம் தலைவர் படங்களுக்கு பாலபிஷேகம் செய்வது ஊர் உலகத்தில் நடக்கும் சாதாரண விடயம் குறிப்பாக தமிழ்நாட்டில், அதே வழக்கம் இங்கேயும் பரவத்தொடங்கியிருக்கிறது. எவ்வளவோ பேர் ஒருவேளை உணவுக்கு கூட ஏங்கி நிற்கும் எமது நாட்டில் போத்தல் கணக்காக பாலை ஒரு மனிதனுக்கு ஊற்றுவது எவ்வளவு முட்டாள்தனம்.இது அஜித் படத்திற்கு மட்டுமல்ல ரஜினி , விஜய் போன்றவர்களுக்கும் அடிக்கடி நடக்கும். இதன் மூலம் நடிகர்களை குறைகூற முடியாது. அவர்கள் யாரும் தங்களுக்கு பாலூத்துமாறு பரிந்துரைப்பதில்லை.இதுபோன்ற செயற்பாடுகள் படத்திற்கு வசூலை அள்ள உதவும். அதுவும் எங்கோ இருக்கும் நடிகருக்கும் சில பல புள்ளிகளுக்கும் , எமக்கென்ன பயன் ?கலைஞர்களை வாழ்த்துவது சிறப்பு அதுவும் அளவோடு இருந்தால் அதனிலும் சிறப்பு.


1 கருத்துரைகள்:

Cnu Vps said...

உங்களது செய்தி வரவேற்கத்தக்கது அதே சமயம்,
அத்தகைய பஞ்சத்தை நிறுத்த வேண்டுமானால் உழல் செய்யும் நபர்களை தண்டிக்க வேண்டும்..உழலை ஒழிக்க முயற்சி எடுக்க வேண்டும்.அது தொடர்பாக ஏதும் விழிப்புணர்வு செய்யுங்கள்.சினிமாத்துறை தொடர்பான இத்தகைய நடவடிக்கை கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றுதான்,ஆனால் இதனை நிறுத்துவதன் மூலம் பஞ்சம் ஒழியும் அல்லது குறைக்கலாம் என்றால் அது முடியாத ஒன்று.
அடிப்படை காரணம் பற்றி கதைக்காமல் வெறும் சில்லறைக்காரணங்களைப்பற்றிக்கதைப்பதால் எந்தப்பயனும் இல்லை.அடிப்படைகளை மாற்றும் போதுதான் மாற்றம் பிறக்கும்.

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv