நீ அம்மா

அன்புக்கு அடித்தளம் நீ அம்மா 
ஆதரித்து வளர்த்தவள் நீ அம்மா 
இன்னல்களை தாண்டி என்னைக்காத்தவள் நீ அம்மா 
ஈரமுள்ள உன் இதயத்தில் அரவணைத்தவள் நீ அம்மா 
உலகிற்கு என்னை தந்தவளும் நீ அம்மா

ஊட்டி வளர்த்தவளும் நீ அம்மா 
என் பசிக்காக உன் பசியை மறந்தவள் நீ அம்மா 
ஏடு துலக்கி கல்வி கொடுத்தவளும் முதலில் நீ அம்மா 
ஐயம் போக்கி தைரியம் கொடுத்ததும் நீ அம்மா 
ஒன்று இரண்டு முதலில் சொல்லித்தந்தவலும் நீ அம்மா 
ஓயாமல் என்னைப்பற்றி சிந்திப்பவளும் நீ அம்மா 
ஓளவை பாட்டியை நிலவில் காட்டி ஊட்டியவளும் நீ அம்மா 
ஃ நான் கண்களால் கண்டுகொண்ட தெய்வம் நீ அம்மா.
                                                                                       யாழ் நீலவன்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv