தாலி மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

“தாலி மகிமை”
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம்
என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள்
நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், 

தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி
இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில்
புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த
பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.
நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக
மாறியிருக்கிறது.
பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்
என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்
பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.
மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக்
குறிக்கிறது.
தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு,
தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை
உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும்
ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு
அணியப்படுகிறது.
----

பெயர்காரணம்

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும்

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv