ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது!ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் செப்டம்பர் 9ஆம் திகதி தூக்கில் இடுவதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்ட மூவரும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கருணை மனுக்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.
இதன் பிறகு தூக்கு தண்டனையை உறுதி செய்யும் குடியரசுத் தலைவர் அலுவலக உத்தரவு நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இம்மூவரையும் தூக்கில் இடுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 9ம் தேதி இம்மூவரும் தூக்கில் இடப்படுவர் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, இவர்கள் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழர் அமைப்புகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv