ந‌ம‌க்காக‌ விடிய‌ட்டும்...


வெற்றிப்பாதை முளைக்குதே
வேகம் கொண்டு எழுந்திடு
போகும் பாதை தூரம்தான்
புயலாய் நீயும் எழுந்திடு...


தோல்விச்சருகுதனை தூரமாக்கு
தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு
துன்பச்சுமைகளை தூளாக்கு
துடிக்கும் திறமைதனை பாதையாக்கு...
தலைநிமிர்ந்து நின்றிட‌
தமிழினை அணிந்திடு
தடைகளை தாண்டிட
தன் நம்பிக்கைதனை உண்டிடு...


மேக‌ங்க‌ள் க‌லைந்தாலும்
ம‌ழைக்க‌ர‌த்தினால் தீண்டலாம்
சோக‌ங்க‌ள் சூழ்ந்தாலும்
மாற்றுக்க‌ருத்தினால் வெல்ல‌லாம்...


வாழ்வின் வேள்வித‌னை
வ‌ய‌லிலும் முகாந்த‌ர‌மிடு
உழைக்கும் எண்ண‌ங்க‌ள்
உக்கிர‌ம் பெற‌ட்டும்
வெட்டாந்த‌ரையிலும்
வெள்ளி நில‌வு வெளிப்ப‌டும்...


வெட்டிச்சாய்த்த‌வை வாழைக‌ள்தான் ச‌ட்டென‌
எரிக்கும் தீயினையும் உறிஞ்சிடு
வீழ்ந்து போன‌து விதைக‌ள்தான்
முட்டி மோதி எழுந்திடு
புய‌லுமுன‌க்கு ப‌ணிந்தே போக‌ட்டும்...


ந‌ம்பிக்கை எண்ணையை உறிஞ்சிக்கொண்டே
ந‌டுக்க‌ட‌லிலும்-எதிர்கால‌த்தை
ந‌ட்டுவை
நாளைய‌ விடியல் ந‌ம‌க்காக‌ விடிய‌ட்டும்...
 த.எலிசபெத் (இலங்கை)

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv