ஐரோப்பிய தொலை தொடர்பு சந்தையில் ஈழத்தமிழர்கள்


ஐரோப்பிய சந்தைகளில் தொலைதொடர்பு சந்தையின் ஜாம்பவான்களை மிரட்டும் அளவிற்கு இரு பெரும் மொபைல் நிறுவனங்கள் வளர்சி பெற்று வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் உங்களுக்கு பரிட்சையமானதுதான். ஒன்று லைக்கா மொபைல் அடுத்ததாக லிபாரா மொபைல். இந்த இரு கம்பனிகளும் ஐரோபாவின் சந்தைகளில் அதிவேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த இரு கம்பனிகளின் நிறுவனர்கள் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களே. புலம்பெயர் மண்ணில் பொருளாதார ரீதியாக சொந்த முயற்சியில் சாதனை படைக்கும் இரு நிறுவனங்களின் நிறுவனர்களை  பார்ப்போமா,,,,


லைக்கா மொபைல் நிறுவனம்
lyca mobile
சுபாஸ் அல்லிராஜா என்பவரே லைக்கா மொபைல் நிறுவனத்தின் பிரதம நிர்வாகியும் சொந்தக்காரரும் ஆவார் இவருக்கு 15 வருட அனுபவம் தொலைபேசி வாணிபத்தில் உள்ளதாக பிரித்தானிய வணிக இதழ் கூறுகின்றது. முற்செலுத்தி கையடக்க தொலைபேசி சிம் காட் வணிகத்தில் ஐரோப்பாவில் முன்னணி நிறுவனங்களில் லைக்கா மொபைல் கம்பனியும் ஒன்றாகும். ஏறக்குறைய 15  முக்கிய உலக சந்தைகளில் லைக்கா மொபைல் ஆதிக்கம் செலுத்துகின்றது. லைக்கா மொபைல் ஐரோப்பிய தொலை தொடர்பு வாணிபத்தில் முக்கியமான நிறுவனமாக மாறி வருகின்றது. இதற்கு இந்த நிறுவனத்தினை ஆரம்பித்து நடாத்தும் சுபாஸ் அல்லிராஜா என்ற நிறைவேற்று அதிகாரியே காரணம். இவரது திறமைக்காக பிரித்தானிய - ஆசிய வணிகர்களுக்கான விருது வழங்கும் நிறுவனத்தால் ஏஏஏ தர விருதும் வழங்கப்பட்டுள்ளது.
லைகா மொபைல் நிறுவனம் வருடாந்தம் 19 பில்லியன் நிமிடங்களை விற்கின்றது. இதன் மூலம் வருடாந்தம் 600 மில்லியன் மொத்த வருமானத்தினை பெறுவதாக பிரித்தானிய வணிக ஏடு தெரிவிக்கின்றது. 2012 ஆம் ஆண்டு 12 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட ஐரோப்பாவில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக லைக்கா மொபைல் வந்துவிடும் என்பது இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் சுபாஸ் அல்லிராஜாவின் திட்டம். இவரது திட்டம் நிறைவேற எம் வாழ்த்துக்கள். தாயகத்தில் பிறந்து புலம்பெயர் நாட்டில் இந்த நாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு வெற்றிக்கொடியை நிலை நாட்டும் லைக்கா மொபைல் நிறுவனம் பெரும் வளர்ச்சியடைய அனைவரும் வாழ்த்துவோம்.

லிபாரா மொபைல் நிறுவனம்
libera
ரதீசன் யோகராஜா என்பவரே லிபாரா நிறுவனத்தின் நிரைவேற்று பணிப்பாளர். லிபாரா மொபைல் கம்பனி 2001 இல் நிறுவப்பட்டது. வருடாந்தம் 371 மில்லியன் யூரோ வருமானத்தை கொண்டுள்ள இந்த கம்பனி ஐரோப்பாவில் தொலை தொடர்பு வாணிபத்தில் மிக முக்கிய போட்டி நிறுவனமாக வளர்ந்து வருகின்றது. வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள் ஆகிய நாடுகளில் லிபாராவின் மொபைல் சந்தை நல்ல இடத்தை பிடித்துவருவதாக கூறபப்டுகின்றது.
லிபாரா நிறுவனமானது 2009 இல் மொபைல் நியூஸ் எவோட், 2007 இல் ரியல் பிசினெஸ் மகசின், 2008 இலும் ரியல் பிசினஸ் மகசின் போன்ற விருதுகளை பெற்றுள்ளது. 2008 இல் முதலாவது புதிய வணிக வருகை தருனர் என்ற எவோட்டினையும் பெற்றுள்ளது.
2006 இல் பிரித்தானியாவில் மிகவேகமாக வளர்ச்சி பெறும் நிறுவனங்களில் லிபாராவும்  பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. தாயகத்தில் பிறந்து ஐரோப்பா மற்றும் ஏனைய நாடுகளிலும் மொபைல் சந்தையில் கொடி கட்டிப்பறக்கும் லிபாரா உரிமையாளர்களை பாராட்டுவோம். அதன் நிறைவேற்று பணிப்பாளராக இருக்கும் ரதீசன் யோகராஜா விற்கு எமது வாழ்த்துக்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv