கச்சத்தீவு யாருக்கு..?


தமிழக சட்டசபையில்  கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானம் ​ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்திய பாராளுமன்றின் ஒப்புதல் இல்லாமல் இந்தியா இலங்கை இடையே  1974ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. 


இந்த ஒப்பந்தம் செல்லாது என அதிமுக சார்பில் 2008ல் வழக்கு தொடரப்பட்டது. 
கச்சத்தீவு குறித்த அனைத்து ஆதாரங்களையும் தன் வசம்வைத்திருக்கும் மாநில வருவாய்த்துறை சார்பில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது. 


இந்நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீறும் வகையில் இலங்கை செயற்பட்டு வருவதாக முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பல​ தடவைகள் குறிப்பிட்டிருந்தார்.

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் போது இந்தியா விதித்திருந்த நிபந்தனைகளை இலங்கை உதாசீனம் செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்மை குறிப்பிடத்தக்கது.  

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv