உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற

கணணி என்பது மனிதனுக்கு ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தினம் ஒரு தொழில்நுட்ப வசதி கணணி சம்பந்தமாக வெளிவருகிறது
நம்முடைய பழைய கணணி பழுதாகினாலோ அல்லது வேறு காரணத்திற்க்காக புதிய கணணியை வாங்குகிறோம். அப்படி வாங்கும் போது நம்முடைய பழைய கணணியில் உள்ள தகவல்கள் மென்பொருட்கள் அனைத்தையும் அப்படியே நம்முடைய புதிய கணணிக்கு மாற்ற மிகுந்த சிரமப்படுவோம்.
கால நேரமும் அதிகமாகும். இந்த பிரச்சினையை தீர்த்து பழைய கணணியில் உள்ள அனைத்து தகவல்களையும் சுலபமாக புதிய கணணிக்கு மாற்ற இரு இலவச மென்பொருள் உள்ளது.
இது முற்றிலும் PickMeApp ஒரு இலவச மென்பொருள் இருந்தாலும் தாங்கள் இந்த தளத்தில் உறுப்பினர் ஆகினால் மட்டுமே இந்த மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்ய முடியும்.
இந்த முறையில் நீங்கள் உங்கள் மென்பொருளை புதிய கணணியில் மாற்றும் போது நாம் செய்து வைத்திருந்த செட்டிங்க்ஸ் கூட மாறாமல் வரும் என்பது இதன் இன்னுமொரு சிறப்பம்சம்.
இந்த மென்பொருளை நிறுவச் செய்ததும் இந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் புதிய கணணிக்கு மாற்ற வேண்டிய மென்பொருட்களை தேர்வு செய்து கொண்டு அதன் ரெஜிஸ்டரியை அப்படியே புதிய கணணியில் நிறுவினால் அந்த மென்பொருள் உங்களின் புதிய கணணியில் வந்து விடும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv