இளம் சமூகமே சிந்தித்து செயல் படுங்கள்

இலங்கையில் தமிழர் பகுதிகளில்   என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர் . கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன.தென்மராட்சி அரச வைத்தியசாலையொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள யுவதியொருத்தியை எங்கு தங்க வைப்பதென்பதில் சாவகச்சேரிப் பொலிஸார் திண்டாடி வருகின்றனர். தெற்கிலிருந்து வருகை தந்த, வாகன சாரதியொருவருடன் தொடர்பு பட்டிருந்த குறித்த யுவதி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் குறித்த வாகனச்சாரதி தப்பித்து, தலைமறைவாகியுள்ள நிலையில், யுவதியும் குடும்பத்தவர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர், இப்போது அரச வைத்தியசாலையில் அடைக்கலம் புகுந்துள்ளார்.இதுவோர் உதாரணமேயெனச் சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள், இவ்வாறாக ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டுள்ள யுவதிகளது எண்ணிக்கை, அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். இவற்றினில் கணிசமானவை கலாச்சார மற்றும் சமூகப் பொறுப்புக்கருதி மூடி மறைக்கப்பட்டு விடுவதாகவும் அத்தரப்புக்கள் கூறுகின்றன.யாழில் அண்மைக் காலங்களில் இளஞ் சமூகத்தினரிடையே அதிகரித்திருக்கும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் பின்னணியும் இதனுடன் தொடர்புபட்டேயுள்ளன. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் சகல மட்டங்களிலும் பரவி வருவதாக பொலிஸ் தரப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. முறைப்பாடுகளும் பெருமளவில் கிடைத்து வருவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.இப்படியான செய்திகளை பார்க்கும் போது உலகத்தமிழர்களால் கலாச்சாரத்தின் இருப்பிடம் எனக் கூறப்பட்ட ஈழத்திலா ? உறவுகளே ஒன்றை மட்டும் செய்யுங்கள் உள்நாட்டு உறவுகளுக்கு நல்ல அறிவுரைகளை கூறுங்கள். அரசோ சிறிது காலம் யாழில் உள்ள இளம் வயதினரை சுட்டுக் கொன்றது. இப்போ வேறு வழிகளில் எம் இனத்தை அழிக்க முனைகிறது தெற்கிலிருந்து வரும் கயவர்களின் அடாவடித்தனங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கின்றது. போதை ,மது , மாது , களவு ,கற்பழிப்பு, சுரண்டல் என பல வழிகளில் அழிக்கின்றார்கள். சிலரோ அரசு அபிவிருத்தி செய்கிறது என்கின்றனர் 4 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுத்து 40 பேரை வேறு வழியில் அழிக்கின்றான். ஆசை காட்டி மாயை வலையில் போட்டு அழிக்கின்றான் இதற்கோ எம்மவர் சிலர் துணை எலும்பு துண்டுக்காக. அவர்கள் வீட்டிலும் நடக்கும் போது திருந்துவார்களா.( நடக்காதிருக்க இறைவனை வேண்டுவோம் )பெற்றோர்களே உங்கள் செல்வங்களை சற்று கண்டிப்புடன் , நல்ல அறிவுரைகளை கூறுங்கள். இளம் சமூகமே நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள் ஒரு கணத்தில் நீங்கள் விடும் தவறு உங்களை மட்டுமல்ல உங்கள் சகோதரங்களை, குடும்பத்தை, உறவுகளை ஏன் நம் இனத்தையே பாதிக்கின்றது. உங்களை இவ்வாறு தப்பான வழிகளில் செயற்பட வைக்க முனைபவர்களை புறந்தள்ளி வெளி உலககிற்கு அடையாளங் காட்டுங்கள் மற்றவர்களும் பாதிக்கபடாமல் விலகுவதற்காக. நீங்கள் அடையாளங் காட்டும் பொழுது அவர்களுக்கு கட்டாயம் தண்டனை கிடைக்கும்.உங்கள் பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள் நல்லவற்றை கேட்டு நடவுங்கள்,சிந்தித்து செயல் படுங்கள் மீண்டும் நல்ல ஒரு இளம் சமுதாயத்தை உலகிற்கு காட்டுங்கள் அப்பொழுதுதான் அரசின் அடாவடித்தனம் குறையும்.#

நன்றி  -அதிர்வு

1 கருத்துரைகள்:

Anonymous said...

VERY NICE

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv