சிறிமத் சுவாமி அஜராத்மானந்தர்ஜி யின் உடலம் தீயுடன் சங்கமம்மட்டக்களப்பில் நேற்று சமாதியடைந்து மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஸனின் தலைவர் சுவாமி சிறிமத் அஜராத்மானந்தர்ஜி யின் உடலம் இன்று தீயுடன் சங்கமமானது.

தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களை சுமந்து நின்றபோது அவர்களுக்கு பெரும் ஆறுதலாகவிருந்து இந்த மண்ணுக்கு அளப்பரிய சேவையாற்றிய ஒரு தொண்டனை இன்று மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல எமது தமிழினமே இழந்து நிற்கின்றது.

பல்வேறு நாடுகளுக்கும் சென்று சேவையாற்ற அவருக்கு பல்வேறு வாய்ப்புக்கள் கிடைத்தபோது எல்லாம் அவற்றினை உதறித்தள்ளிவிட்டு எமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஆன்மீக தலைவராக மட்டுமன்றி சிறந்த பண்பாளராகவும் இருந்தவரை இன்று இழந்துள்ளோம்.

எமது மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் இன்றும் ஒரு பேச்சு இருக்கின்றது.யாராவது சிறுவயதில் குழப்பமான முறையில் நடந்தால் அவரை சுவாமியிடம் கொண்டுவந்து விட்டுச் சென்றுவிடுவார்கள்.

அவ்வாறு விட்டுச் செல்பவன் காலப்போக்கில் சிறந்த ஒழுக்கமிக்கவனாக சிறந்த சமூக சேவையாளனாக கல்விமானாக வெளியேறிச் செல்வது சுவாமியின் தனிப்பட்ட சிறப்பம்சமாகும்.

இவ்வாறான ஒருவரின் இழப்பை எமது மாவட்டம் ஈடுசெய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே.

இன்று காலை முதல் மக்களின் அஞ்சலிக்காக கல்லடி விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமியின் உடலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாபா. அரியநேத்திரன் ஆகியோர் இறுதியஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3.00 மணி தொடக்கம் இறுதியஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன் சுவாமியின் உடலம் ஊர்வலமாக அருகில் உள்ள சாரதா இல்லத்தின் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்றதுடன் சுவாமியின் இறுதி பயணமாக உடலம் தகனம் செய்யப்பட்டது.

இராமகிருஸ்ண மிசன் சுவாமி அஜராத்மகானந்த ஜீ அவர்களின் மறைவு துன்புற்றிருக்கும் தமிழர்களின் ஆத்ம நிம்மதி வழிகளில் ஒன்றை இழந்ததற்கு ஒப்பானது.பா.உறுப்பினர் சிறிதரன் அஞ்சலி

தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றில் அவர்களை நல்வழியில் இட்டுச் சென்றதற்கும், ஆத்ம நிம்மதி தந்ததிலும் சமய ஆத்மீகப் பெரியார்களின் பங்கும் பணியும் அளப்பரியது.

அந்த வழியில் மறைந்த சுவாமி அஜராத்மகானந்த ஜீ அவர்களும் எமது நெஞ்சங்களில் நிலைத்த இடம்பெறுகின்றார். மட்டு நகர் பெற்றெடுத்த மகான் அவர்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றுப் பாதையில் மட்டு நிலம் தந்த பொக்கிசங்கள் சகல துறைகளிலும் புகழ்வாய்ந்த .இடத்தை பெறுகின்றன. அந்தவகையில் ஆத்மீகவழியில் சமுகத்தொண்டாற்றி மக்கள் இன்னல்கள் தீர்த்த சுவாமி மறைந்தது. எமது சமுகத்திற்கு ஆத்ம நிம்மதி தரும் திரு வழியின் நிழலை இழந்ததாகின்றது.

இன்று அன்பையும் அறத்தையும் போதிக்கும் சமய ஆத்மீக வழியில் வந்த ஒரு சிலர் கொலை பாதகங்ளை செய்தவர்கள் பின்னால் நின்று கொண்டு இறைவழியை இழிவுபடுத்துகின்றவர்களாக மாறி நிற்கின்ற சந்தர்ப்பத்தில் சுவாமி இரமகிருஸ்ண மிசன் சுவாமி அஜராத்மகானந்த ஜீ எமது மனங்களில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகின்றவராக இருக்கின்றார்.

மட்டக்களப்பு மண் போராலும் இயற்கை அனர்த்தங்களாலும் மிகவும்பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை மீளக்கட்டியெழுப்பும் பணியில் சுவாமியின் பங்கும் எம்மக்களில் என்றைக்கும் நினைவு அழியாது இருக்கும்.

இத்தகையதோர் மாண்பு மிக்க ஆன்மீக வழிகாட்டியை நாம் இழந்திருக்கின்றபோதும் அவர் போதித்த திருவழியை பின்பற்றி வாழ்வதே நாம் அவருக்குச் செய்யும் பெருவணக்கம். மறைந்த இராமகிருஸ்ண மிசன் சுவாமி அஜராத்மகானந்த ஜீ அவர்களுக்கு கிளிநொச்சி யாழ்ப்பாண மக்களின் சார்பில் எங்கள் வணக்கத்தை உரித்தாக்குகின்றோம்.
என பா.உறுப்பினர் சி.சிறீதரன் தனது அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv