ஈழத் தமிழர்களைப் புறக்கணித்த காங்கிரசுக்கு தமிழர்கள் பாடம் புகட்டினர் !

தமிழக சட்டமன்றத் தோ்தல்களில் இதுவரை வெளியான வாக்கு எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அ.தி.மு.க. மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.
தற்போதைக்குக் கிடைத்துள்ள வாக்கு எண்ணிக்கை விபரங்களின் அடிப்படையில் சுமார் 196 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது என அறியப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையானது 234 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் 118 உறுப்பினர்களைப் பெறும் கட்சி ஆளுங்கட்சியாகத் தெரிவு செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில் வெற்றிக்கான இலக்கையும் தாண்டி அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. அதுபோக கலைஞரின் தீ.மு.க கட்சியில் இருந்த பலர் டெப்பாசிட்டை இழந்து அதிர்சித்தோல்வியடைந்துள்ளனர். கருணாநிதியின் குடும்ப அரசியல் இத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. அத்தோடு இன்று மாலையே கனிமொழி கைதாகலாம் என்ற செய்திகளும் பரவலாக பேசப்படுகிறது. ஸ்பெக்ரம் ஊழலில், பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிய கலைஞர் குடும்பம், காஸ்பர் அடிகளார் மற்றும் கார்த்திக் சிதம்பரம் போன்றோர் மீது விசாரணைகள் தீவிரமாகும் என நம்பப்படுகிறது.

அத்தோடு மட்டுமல்லாது, கலைஞரின் பேரப்பிள்ளைகள், சினிமாத் துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு, தமிழ் நாட்டு ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தி.மு.காவின் அடிவருடியாகச் செயல்பட்ட நக்கீரன் போன்ற பத்திரிகளைகள், எவ்வளவோ போலிப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இருப்பினும் மக்கள் பெருவாரியாக வாக்குகளைப் போட்டு ஆ.தி.மு.காவை பெருவெற்றியடைய வைத்துள்ளார்கள். ஈழத் தமிழர்களைப் புறக்கணித்தது, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு துணைபோனது, காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து நாடகமாடியது என தி.மு.காவை தமிழக மக்கள் புறக்கணித்ததற்கு இது ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. இனி வருங்காலங்களில் கலைஞரின் பல ஊழல் விடையங்கள் வெளிவர இருக்கிறது. தாம் அடைந்த பெருந்தோல்வியை ஏற்று கலைஞர் அரசியலில் இருந்து இனியாவது ஒதுங்குவாரா ?

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv