பிரின்ஸ் வில்லியம் – இளவரசி கற்றரினா ( கேற் மிடில்ரொன் ) திருமணம் சிறப்பாக நடந்தேறியது..


பிரின்ஸ் வில்லியம் – இளவரசி கற்றரினா ( கேற் மிடில்ரொன் ) திருமணம் சிறப்பாக நடந்தேறியது.
இளவரசி டயானாவின் திருமணத்தின் பின்னர் இங்கிலாந்து விழாக்கோலம் பூண்டது.. வாழ்க வாழ்க மணமக்கள்…
இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமண வைபவம் இன்று உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கும்படியாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் வெஸ்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் உலகம் முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்ட 1900 விருந்தினர் புடைசூழ ஆர்க் பிஷப் கென்ரன் பரி அவர்களால் நடாத்தி வைக்கப்பட்டது.
திருமணம் நடைபெற்றதும் கேற் மிடில்ரொக் இளவரசி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அதேநேரம் இளவரசர் வில்லியம் கேர்ரொக் ஒப் கேம்பிரிட்ஜ் என்ற சிறப்புப் பெயரை பெறுகிறார். கிறீத்தவ தேவாலய மரபின்படி மண முடித்தவர்கள் நான்கு குதிரைகள் பூட்டிய 1902ம் ஆண்டு செய்யப்பட்ட வண்டியில் ஊர்வலமாகப் புறப்பட்டனர். இக்குதிரைகளுக்கு முன்னால் இரண்டு குதிரைகள் போக.. பக்கிங்காம் பலஸ் நோக்கி ஊர்வலம் ஆரம்பித்தது. இங்கு 650 பேருக்கு மகாராணி எலிசபெத் விருந்தளித்து கௌரவிக்க இருக்கிறார்.
இந்த நிகழ்வில் பிரின்ஸ் சாள்ஸ் தம்பதியர், எலிசபெத் மகாராணி, அவருடைய சகோதரி, பேரக்குழந்தைகள் உட்பட தற்போது உலகில் அரச பரம்பரை ஆட்சியை தக்க வைத்துள்ள மன்னர் குடும்பங்கள் பங்கேற்றன. இதில் மனித உரிமை மீறல்களை நடாத்திக்கொண்டிருக்கும் சில நாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதேவேளை பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரொனி பிளேயர் அழைக்கப்படவில்லை இவர் கத்தோலிக்க மதத்திற்கு மாறியது தெரிந்ததே. அதுபோல கோர்டன் பிரவுணும் அழைக்கப்படவில்லை. இதில் சிரிய அம்பாசிடரும் விலத்தப்பட்டுள்ளார். இது குறித்த சர்ச்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை இந்த நிகழ்வை குழப்ப திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் இன்று அதிகாலையே 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அயரிஸ் கோட் என்னும் பாரம்பரிய சிவப்பு நிற ஆடை அணிந்து, கறுப்பு தொப்பி அணிந்து பிரின்ஸ் வில்லியம் அமோகமாக காட்சி கொடுத்தார். அவருடன் இணைந்து டயானா போல வெள்ளை நிற ஆடை அணிந்து இளவரசி அருகில் அமர்ந்திருந்தார். 29 யூலை 1981 ம் ஆண்டு நடைபெற்ற இளவரசர் சாள்ஸ் டயானா திருமணத்தின் பின்னர் நடைபெறும் மிகப்பெரும் நிகழ்வு இதுவாகும்.
.


சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்தை கட்டமைவு செய்தோம் என்று கூறிய பிரிட்டன் சாம்ராஜ்ஜியம் தனது பெருமைகளை இழந்துவிடாது கட்டிக்காக்கும் ஒரு பாரம்பரிய மரபை இங்கே காண்கிறோம். தமக்கு மேற்பட்டவர் இந்த உலகில் எங்கும் இல்லை என்று உணர்த்துவது போல இந்த நிழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள், நிகழ்வு ஏற்பாடுகள் யாவும் அமைந்திருந்தன. இப்போது இளவரசர் தம்பதியர் பக்கிங்காம் அரண்மனையை சென்றடைந்தனர், வைபவம் தொடர்கிறது.
வாழ்க வாழ்க மணமக்கள்…!

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv