யார் இந்த சத்ய சாய் பாபா ????


உலகிலுள்ள பலகோடி பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஒரு வாழும் தெய்வமாகக் கருதப்படும் பகவான் சத்ய சாய் பாபா அவர்கள் இன்று காலை இந்திய நேரப்படி காலை 7.40க்கு இறையடியெய்தினார். 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் திகதி பிறந்த இவரது இயற்பெயர் சத்ய நாராயன ராஜூ ஆகும். இவரின் தாயார் ஈஸ்வரம்மாளுக்கும். தந்தையார் பெயர் ராஜூ ரட்னகரம் ஆகும். பகவான் சத்திய சாகி பாபா ஆர்கள் இளமைக் காலத்தில் இருந்தே ஒரு அதிசயக் குழந்தையாகத் திகழ்ந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.பாபா அவர்கள் 14 வயதாக இருக்கும்போது(1944) மார்ச் மாதம் 8ம் திகதி ஒரு சம்பவம் நடந்ததாக பதிவாகியுள்ளது. கொடிய விஷமுடைய கொடுக்கான் அவரைத் தீண்டியுள்ளது. பல மணிநேரமாக அவர் நினைவிழந்து இருந்திருக்கிறார். இனி மீண்டு எழ மாட்டார் என நாட்டுப்புற வைத்தியர்கள் தெரிவித்தவேளை, அவர் சில மணிநேரங்களில் எழுந்து பேச ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் எழுந்து பேச ஆரம்பித்த பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள், தேள் கடித்ததால் அவருக்கு புத்தி பேதலித்ததாக நம்பினர். ஆனால் அவர் பேசிய பாஷை சமஸ்கிரதம் என்று பின்னர் அறியப்பட்டது. அவர் சமஸ்கிரதத்தை முன்னர் கற்றது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். அப்படி இருக்கும்போது அதை அவர் எவ்வாறு பேசினார் என மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.


இந்த நிலையில் 1940-ம் ஆண்டு மே 23-ந் தேதி சாய்பாபா வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்தார். திடீரென தனது கையில் இருந்து கற்கண்டை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் தந்தை ராஜு ரத்னகரம் கோபம் அடைந்து �ஏன் இப்படி மாய மந்திர வேலை செய்கிறாய்� என்று கூறி திட்டினார். அதற்கு சாய்பாபா நான் யார் தெரியுமா ? சீரடி சாய்பாபாவின் மறு பிறவி என்று கூறினார். அதன் மூலமே அவரை முதல் முதல் ஒரு தெய்வப்பிறவி என மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.


சீரடி என்னும் இடத்தில் 1838ம் ஆண்டு பிறந்தவர் சீரடி பாபா ஆவார். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்கள் குறைகளை நீக்கினார். சீரடியில் பல கோயில்கள் மடங்களை உருவாக்கிய சீரடி பாபா அவர்களை பல லச்சக்கணக்கான மக்கள் போற்றி வணங்கினர். மக்களின் குறைகளைத் தீர்த்த அவர், தீராத வியாதிகளையும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளையும் குணமாக்கினார். அவர் 1918ம் ஆண்டு தனது 80 வது வயதில் இறைபதம் எய்தினார். அதற்கு முன்னர் தாம் இறைபதம் எய்யவிருக்கும் நாளை அவர் மக்களுக்குச் சொன்னதோடு, இன்னுமோர் விடையத்தையும் தெரிவித்தார். அது தான் மறு பிறவியாகும். இந்துக்களால் நம்பப்படும் ஒரு விடையம் மறு பிறவியாகும்.


1918ம் ஆண்டு அவர் இறக்க முன் தான் மீண்டும் பிறந்து வருவேன் என்றும் அதிசயங்களை நிகழ்த்துவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னரே சத்திய சாகி பாபா அவர்கள் அவதரித்தார். புட்டப்பத்தி சென்ற அவர் 40துகளில் பல அற்புதங்களைப் புரிந்து சீரடி பாபாவின் மறு அவதாரம் தானே என மக்களுக்கு கூறினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் அவருக்கு பக்தர்கள் பெருகினார். வெளிநாட்டவரும் வேற்றின மக்களும் அவரை நாடி, நன்மைகளைப் பெற்றனர். பிள்ளையில்லாத பலர் பிள்ளை வரங்களையும், தீராத நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுதலையும், கண் பார்வை இழந்தோர் கண் பார்வையும் திரும்பப் பெற்றனர் எனச் சொல்லப்படுகிறது.
பல அற்புதங்களை நிகழ்த்தி, தெய்வீகக் குணம் கொண்ட பாபா மேல் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது. அவர் நிகழ்த்தும் அதிசயங்கள் சித்து விளையாட்டு அல்லது கண்கட்டு வித்தை என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது. அவர் பாலியல்ரீதியாக தனை துண்புறுத்தியதாகவும் சிலர் புகார் கூறியுள்ளனர். அதனை பி.பி.சி போன்ற சர்வதேச தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது. அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபனமாகவில்லை என்பது அனைவரும் அறிந்த விடையம். மனிதன் எவ்வாறு கடவுள் ஆகலாம், ஒரு மனிதனை எவ்வாறு கடவுள் என நாம் கும்பிட முடியும் என பல பகுத்தறிவு வாதிகளும் நாத்திகர்களும் பாபாவை விமர்சிப்பது உண்டு. ஆனால் ஒரு மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்று எழும் கேள்விகளுக்கு கீழே பதில்கள் உள்ளது.குறிப்பாக சத்ய சாய் பாபா அவர்களுக்கு, வெளிநாட்டு பக்தர்கள் அதிகரித்ததால் அவர்கள் நன்கொடையாகக் கொடுக்கும் பணம் கோடிக்கணக்கில் சேர ஆரம்பித்தது. புட்டப்பத்தி என்னும் மிகவும் பின் தங்கிய கிராமத்தை அப் பணம் கொண்டு அவர் நவீன நகரமாக மாறினார். மலைகள் சூழ அடிவாரத்தில் இருந்த அக் குக்கிராமத்தை ஒரு நகரமாக்கிய பெருமை அவரையே சாரும். விமானநிலையம், மருத்துவக் கல்லூரி, இலவசப் படிப்பு, பாடசாலை, பல்கலைக்கழகம், இலவச மருத்துவமனை, இலவச இருதய அறுவை சிகிச்சை, என பல திட்டங்களை நிறைவேற்றினார் பாபா. பாபா இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை, இதுவரை பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமா, குடிக்கும் நீர் என்றால் அது ஒரு கனவு என்று நினைத்திருந்த கிராம மக்களுக்கு நீர் வசதி செய்துகொடுத்துள்ளார்.

ஆந்திரா அரசாங்கமே செய்ய பின்னடித்த காரியம் ஒன்றை எந்த எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை என அவரே முன் நின்று செய்து முடித்தார். பல கோடி ரூபாசெலவில், சுமார் 3500 கி.மீட்டர் நீளமான குழாய்களை அமைத்து, அதனூடாக நீரை எடுத்துவந்து வறண்ட பல கிராமங்களைச் செழிப்புறச் செய்தார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதா மக்கள், நீர் கிடைத்ததால் விவசாயம் செய்தனர். தமது வாழ்வாதாரத்தை வளப்படுத்தினர். சுமார் 5 லட்சம் மக்கள் பல குக்கிராமங்களில் இன்று விவசாயம் செவ்வது பாபாவின் நீர்பாசனத் திட்டத்தினால் என்பது யாவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக பல சர்வதேச தொலைக்காட்சிகள், பாபாவை புகழ்ந்து பாராட்டியது.

வாயில் இருந்து லிங்கத்தை எடுப்பது, மண்ணை குங்குமமாக்குவது, என பல அதிசயங்களை அவர் செய்துகாட்டியதும், அதனை சில மனிதர்கள் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சிப்பதும் ஒரு பக்கம் இருக்கிறது. நாம் அதனை ஒரு பக்கமாகவே விட்டுவிடுவோம். லட்சக்கணக்கான மக்கள் உயிர்வாழ், லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்கள் நினைத்துப்பார்க்க முடியாத சத்திர சிகிச்சைகளை இலவசமாகச் செய்த, லட்சக்கணக்காம மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுத்து, லட்சக்கணக்காம மக்களுக்கு குடிக்கவும், விவசாயத்துக்கும் தண்ணீர் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரங்களை உயர்த்தி அவர்களை வாழவைத்த ஒரு நல்ல மனிதராகவே நான் பகவான் சத்ய சாய் பாபா அவர்களைப் பார்க்கிறேன் என்றால் மிகையாகாது.

பாபா புரிந்த அற்புதங்களை எவர் வேண்டும் என்றாலும், விமர்சிக்கலாம். ஆனால் அவர் புரிந்துள்ள மனிதநேயத் தொண்டையே இல்லை மனிதநேய உதவிகளையே எவராலும் மறுக்கவோ இல்லை விமர்சிக்கவோ முடியாது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றான் கவிஞன். அதனையே பாபா செய்திருக்கிறார் எனலாம். தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழிப்போம் என்றான் புரட்சிக்கவி பாரதி . பாபா மக்களுக்கு உணவை வழங்கியதோடு நின்று விடாது, விவசாயத்தைச் செய்ய உதவியுள்ளார். லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி, வறுமையில் இருந்து எவன் ஒருவன் உயிர் காக்கிறானோ அவனே கடவுள் ! அப்படி என்றால் பாகவான் சத்ய சாய் பாபாவும் ஒரு கடவுள் தான் !

அவர் மீண்டு புண்ணிய பூமியில் பிறப்பார் என இந்துக்கள் நம்பியுள்ளனர். அதுவும் விரைவில் நடந்தேறும் சீரடி பாபா, பின்னர் சத்ய சாய் பாபா போல மறுபடியும் பாபா பிறப்பார் இதுவே இந்துக்களின் நம்பிக்கை !


0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv