கருணாநிதியை விட பெரிய தீயசக்தி எது ?

கருணாநிதி எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுவென்றால், கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.
தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ?
நிச்சயமாக இல்லை. கேடி சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை. கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார். “இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார்.


மேலும் படிக்க


~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv