உலக கிண்ணம் 2011: இலங்கையை வீழ்த்தி சம்பியனாது இந்தியா

ஆவது சர்வதேச உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணிக்கு வெற்றிபெற, 275 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.


இதன்படி இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக மஹேல ஜயவர்தன 103 ஓட்டங்களையும் சங்கக்கார 48 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சாகிர் கான் யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்திர் சேவாக் ஓட்டம் எதுவும் பெறத நிலையில் மலிங்கவின் பந்தில் ஆட்டமிழந்தார். பல எதிர்பார்ப்புடன் இருந்த டெண்டுல்கர் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்து கம்பீர் மற்றும் விராட் கோலியின் இணைப்பாட்டம் காரணமாக இந்தியா வலுவான நிலையை எட்டியது இதில் கம்பீர் 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அணியின் தலைவர் அபாரமாக துடிப்பெடுத்தாடி அணியின் வெற்றினை உறுதி செய்தார்.0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv