போரினால் உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் மக்களுக்கு ஆறுதல்கூற இந்தவார பழமொழிகள் வருகின்றன..

போரினால் உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் மக்களுக்கு ஆறுதல்கூற இந்தவார பழமொழிகள் வருகின்றன..


உலகப் புகழ்பெற்ற போர்க்காலத் துயர் மீட்புத் தகவல்களின் தேன்கூடு !01. இங்கு நம்மை நேசிப்பவரை அறிந்து அவர்களுக்கு அன்பு செலுத்தாவிட்டால் இன்னொரு வாழ்வு இருந்து என்ன பயன் ?02. இறந்தவர்களுக்கும் ஓர் ஆறுதல் இருக்கிறது. அவர்கள் மறுபடி வாழ்ந்தால் அவர்கள் வாழ்வும் நம் வாழ்வைப்போலவே நலமாக இருக்கும்.03. உடைந்த இதயத்துடன் இருக்கும் எவருமே பயம் கொள்ள வேண்டாம். எல்லோருக்கும் இருக்கும் மாபெரும் உயர்ந்த நம்பிக்கை எதுவென்றால் மரணம் என்பது மோசமான நிலையிலும் முழு ஓய்வுதான் என்று கூறுகிறது.04. நமக்கு ஒரு மதம் அவசியம். அது எதுவென்றால், வாழ்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். இறந்தவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள்.05. இங்கே நீங்கள் நேசித்த குழந்தையை என்றோ ஒரு நாள் மறுபடி சந்தித்து அன்பு காட்டுவீர்கள் என்று நம்புங்கள்.06. எந்தத் துயரமும் காலத்தால் குறைக்கப்படாமல், மிருதுவாக்கப்படாமல் போனது கிடையாது.07. ஒருவர் இறந்த துக்கத்தை மறக்க அந்த இழப்பை எதிர் கொள்வதுதான் முதல் அடி. உடனடியாக சுதாரித்துக்கொண்டு மறுபடி எழுபவன்தான் அதிலிருந்து வெற்றி பெறுவான்.08. கசப்பினாலும், நொந்து கொள்வதாலும் சோகத்தை வெல்ல முடியாது. இழப்பை மூடிய கதவைப் போல ஏற்றுக் கொள்ள வேண்டும். பழைய வாழ்வுக்கு திரும்ப வேண்டும். புதய நண்பர்களை புதிய ஆர்வங்களை கண்டறிய வேண்டும்.09. மிகவும் இயல்பான, அவசியமான, எல்லோருக்கும் பொதுவான மரணத்தை மனித குலத்திற்கான கேடு என்று கருதுவது சாத்தியமே இல்லை.10. தோட்டத்தின் சுவரில் பதிக்கப்பட்ட கதவே மரணம் !

மெதுவாகக் கதவைத் தள்ளினால் திறந்து அஸ்த்தமனம் தெரியும் !

ஜன்னலின் மேலே பசுமையான கொடி !

அதன்மேல் வெளிச்சம் படரும் !

அந்த நிலைப்படியின் மேல் களைப்பான தீர்மானமான காலடி எந்த இதயத்தையும், எதுவுமே காயப்படுத்த முடியாது !

மரணம் தோட்டச் சுவரின் பழைய கதவுதான் !11. போர்க்காலங்களில் இறப்புக்கள் அதிகம் ஏற்படும், அவற்றை இலகுவாகக் கடந்து செல்ல ஒரேயொரு வழி வேகமான செயற்பாடுதான்.12. இந்த உலகத்தில் வாழ்வும், சாவும் சமமான ராஜாக்களே. இதுவரை இறந்தவர்கள் அனைவரும் சந்தித்ததை எல்லோரும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இறந்தவர் துன்பப்படுவதில்லை மரணம் பரிபூரண ஓய்வுதான். – ராபட் இங்கர்சால்.13. வாழ்வென்னும் அற்புதமான மரத்திலிருந்து மொட்டுக்களும், மலர்களும், பழுத்த பழங்களோடு விழுகின்றன. பூமியென்னும் பொதுவான படுக்கையில் மன்னர்களும், மழலைகளும் அருகருகே உறங்குகிறார்கள்.14. இழப்பை எதிர் கொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, மறுபடி வாழ்வில் ஈடுபட்டு, இழப்பைக்கடந்து அதை மீறிச் செல்வதுதான் இறந்த துக்கத்தை வெற்றி கொள்ள உதவும் முதல் இரகசியமாகும். சுய பச்சாத்தாபத்தில் இருப்பது அழிவைத்தான் தரும். மறுபடி வாழ்வில் ஈடுபடுவதுதான் வெற்றிக்கு உதவும்.15. இறந்தவர்களுக்காக அதிக துக்கம் கொள்வது பைத்தியக்காரத்தனமானது. ஏனெனில் உயிரோடு இருப்பவர்களுக்கு அது அவமரியாதையாகும். இறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியவும் தெரியாது.16. இறந்தவர்களுக்கு துக்கம் கொண்டாட உண்மையான வழி அவர்களுக்கு சொந்தமானவர்களை பாதுகாப்பதுதான்.17. நீங்கள் அதிகபட்ச துயரத்தில் இருக்கும்போது, உலகில் நீங்கள் செய்ய ஏதோ ஒரு கடமை இருக்கிறது என்று நம்புங்கள். அடுத்தவர் துன்பத்தை இன்பமாக மாற்றும்வரை வாழ்க்கை வீணாகப் போவதில்லை.18. அடர்ந்த காடுகளில் இருந்தும், சிக்கல்களில் இருந்தும் நம்மை விடுவித்து நல்வழியில் அழைத்து செல்ல எப்போதுமே ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது.19. இறந்தவர்களுக்காக அழ வேண்டாம், அழுது அவர்களை திரும்ப வரும்படி சொல்ல நாம் யார் ?20. கலங்கரை விளக்கத்தை பார்க்கும் பணிக்காக பெண்ணொருத்தி கணவனுடன் புதிய இடத்திற்கு வந்தாள். அதையே இரவு பகலாகப் பார்த்த கணவன் நோயுற்று இறந்தான். அவனை அந்த இடத்தில் புதைத்தார்கள். இறக்கும் போது அவன் விளக்கை பார்த்துக் கொள் என்றுவிட்டு இறந்தான். அவள் அவன் சொன்னபடியே கலங்கரை விளக்கத்தை கவனமாக பார்த்துக் கொண்டே, அவன் கல்லறையையும் பார்த்தாள். விளக்கைப் பார்த்துக் கொள் என்ற குரல் தினசரி அவளுக்குக் கேட்கும். சில நாட்களில் கவலைகள் மறந்து இயல்பான பெண்ணாக அவள் மாறிவிட்டாள். ஆம் கையில் இருக்கும் வாழ்க்கை விளக்குப் போன்றதாகும். அதை கவனமாக பாருங்கள், இறந்தவர்களை நினைத்து அழுது விளக்கை அணைத்துவிடாதீர்கள்.21. நாம் மறுபடி எழுவோம், செயற்படுவோம், எந்த விதிக்கும் தயாராவோம், தொடர்ந்து வெற்றி பெறுவோம், தேடுவோம், போராடக் கற்போம்.22. உலகின் பரந்து விரிந்த போர்க்களத்தில் வாழ்வென்ற கூரையற்ற கூடாரத்தில் அறிவற்ற மந்தைகளாக இருக்காதீர்கள், போர்க்களத்தில் வீரனாகுங்கள்.23. எவ்வளவு இனியது என்றாலும் எதிர்காலத்தை நம்பாதீர்கள். இறந்தவர்கள் இறந்தவர்களை பார்த்துக் கொள்ளட்டும். செயற்படுங்கள் இன்றே இப்போதே இதயத்துடன் மேலே இறைவனுடன்.24. சோர்வில் நான் துவளாமல் இருக்க, கடமையில் நான் என்னை இழந்தாக வேண்டும்.25. துயரத்தால் நொந்த அனுபவமில்லாத இதயம் உயரத்தை தேடிப் பறக்காது. சந்தோசமான எதிர்காலத்தைத் தேடாது. துயரமான இதயம்தான் காத்திருக்கக் கற்றுத்தருகிறது.26. நாம் பயப்பட வேண்டிய ஒரே விடயம் பயம் மட்டுமே.27. பெயரற்ற, காரணமற்ற, தேவையற்ற பயங்கள் தேவையான முயற்சிகளை முடக்கிவிடுகின்றன. நாம் பின்வாங்குவதை நிறுத்திவிட்டு முன்னேற வேண்டும்.28. புயலின்போது கடிகாரம் ஓடுவதைப்போலவே மனமும் ஓடிக்கொண்டே இருக்கும். அமைதியான மனத்தை யாராலும் குழப்பிவிட முடியாது.29. வாழ்வில் பயப்பட எதுவும் இல்லை அதை புரிந்து கொண்டால் மட்டும் போதும்.30. சுறுசுறுப்பான, தைரியமான, செயல்பூர்வமான மனிதர்களால்தான் தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும்.


அடுத்த வாரம் புது நம்பிக்கை தரும் செய்திகளை தாங்கி வருகிறது.Written by Thurai


1 கருத்துரைகள்:

♔ம.தி.சுதா♔ said...

மனதைத் தொட்டன.. முடிந்தால் இதையும் பாருங்கள் இதுவும் ஈழ விடயம் தான்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv