இரண்டு மாத செல்போன் காதல்; நகைகளுடன் மாயமான மணமகன்

கொழும்பு கண்டி துரித சேவை பஸ்ஸில் யுவதியொருவருடன் காதலைத் தொடங்கிய வாலிபன் ஒருவன் இரண்டு மாத காலத்தில் செல்போன் மற்றும் சந்திப்புக்களின் பின் தன் காதலை வளர்த்து யுவதியின் பெற்றோரின் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக் கொண்டான்.யுவதியின் நகைகளை தற்காலத்துக்கு ஏற்றவாறு நவீனடிசைனில் செய்ய வேண்டுமென வற்புறுத்தி அவளிடமிருந்த 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபா நகைகளை வாங்கிக் கொண்டு தலை மறைவாகியுள்ளான்.

யுவதியிடம் நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொண்டு இளைஞன் மோதிரம் மாற்றும் அளவுக்குச் சென்றான். அன்றைய தினமே தனது கைவரிசையைக் காட்டியுள்ளான்.

கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறையிட்ட யுவதியும் பெற்றோரும் கொடுத்த செல்போன் இலக்கத்தைக் கொண்டு காதலன் கைது செய்யப்பட்டான். கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv