மூதாட்டியின் வீரச்செயல்-உண்மை வீடியோ.

லண்டனில் உள்ள நோத்தம்டன்(Northampton)  நகைக் கடை ஒன்றின் கண்ணாடிகளை உடைத்து அதன் மூலம் நகைகளைக் கொள்ளையடிக்க ஒரு இளைஞர் கூட்டம் முற்பட்டுள்ளது. அதனைப் பார்வையுற்றவாறே பொதுமக்களும் ஒதுங்கிப் போகின்றனர்.
ஆனால் எங்கிருந்தோ வந்த மூதாட்டி ஒருவர்( சிவப்பு நிற ஆடை) தனது கைப் பையால் அவர்களை வீரமாகத் தாக்கியுள்ளார். அவரின் திடீர் தாக்குதல் காரணமாக அவர்கள் பின் வாங்கும் நேரம், கடைக்காரர் தமது கண்ணாடியைப் பாதுகாக்க இருப்புக் கதவுகளை மூடியுள்ளார். அதனால் இனி கண்ணாடியை உடைக்கமுடியாது எனத் தெரிந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிக்க நினைத்த வேளை மூதாட்டியின் அடி காரணமாக ஒருவர் நிலத்தில் விழுந்துள்ளார்.

மூதாட்டியே கொள்ளையர்களைத் தாக்கும் போது நாங்கள் சும்மா இருப்பதா என எண்ணிய பொதுமக்களும் திரண்டு இறுதியில் நால்வரை வரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv