சிந்தனைத் தொடர்

01. நீங்கள் வாழ்வை நேசிக்கிறீர்களா ? அப்படியானால் நேரத்தை வீணாக்காதீர்கள், ஏனெனில் வாழ்வு அதனால்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

02. சூரிய உதயத்திற்கும் அஸ்த்தமனத்திற்கும் நடுவே, இரண்டு தங்க மயமான மணி நேரங்கள், ஒவ்வொன்றிலும் அதுபது வைர நிமிடங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசு எதுவும் கிடையாது. ஏனெனில் அவற்றை விட சிறந்த பரிசு எதுவும் கிடையாது.

03. நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் நாளைய விதிபற்றிச் சொல்ல முடியாது, ஊகிக்க முடியாது. ஆனால் இன்றைய பொழுதை வீணாக்காதீர்கள். ஏனெனில் இது மறுபடியும் வரவே வராது.

04. நேரத்தின் உண்மையான மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சோர்வு, சோம்பேறித்தனம், தள்ளிப்போடுதல் கூடவே கூடாது. இன்று செய்ய முடிந்ததை நாளை தள்ளிப் போடாதீர்கள்.

05. ஒரு திட்டமும் இல்லாமால் நிகழ்ச்சிகளை தானாகவே தன்னிஷ்டம்போல நடக்கவிட்டால் எல்லாமே குழம்பிப்போய் பின் சரி செய்யவோ, சீர்தூக்கிப் பார்க்கவோ முடியாமல் போய்விடும்.

06. ஒவ்வொரு நாளிலும் 24 மணி நேரம் என்னும் தங்கமயமான மணித்துளிகள் உள்ளன. அதை சந்தோஷமாகவும், அறிவுபூர்வமாகவும் கண்டு பிடித்து செலவு செய்தால் சந்தோஷத்தையும் திருப்தியையும் பதிலாக பெற்றுக் கொள்ளலாம்.

07. எல்லாவற்றுக்குமே காலம் ஒரு விவரிக்க முடியாத மூலப் பொருள் அது இருந்தால் எல்லாமே சாத்தியம். அது இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியமில்லை.

08. உங்களுக்குக் கிடைக்கும் நேரம் ஓர் அன்றாட அற்புதம், அதைக் கூர்ந்து அவதானித்தால் அது உண்மையிலேயே ஆச்சரியமானதாக இரு%

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv