பேஸ்புக், ட்விட்டரால் டைவர்ஸ் விர்ர்.

எங்கோ மூலை முடுக்குகளில் இருப்பவர்களை ஒன்றிணைப்பதாக கூறப்படும் பேஸ்புக், ட்விட்டர் சமூக இணைய தளங்கள் ஒரே வீட்டில் ஒரே பெட்ரூமில் இருக்கும் தம்பதிகளை சைலன்டாக பிரித்து டைவர்ஸ் செய்ய வைத்துவிடுகிறது என்ற பகீர் தகவல் அமெரிக்க சர்வேயில் தெரியவந்திருக்கிறது


உலகின் எந்த பகுதிகளில் இருப்பவர்களையும் இணைக்கும் சமூக இணையதளங்களாக பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை புகழப்படுகின்றன. இவற்றின் பயன்கள், ஆபத்துகள் பற்றி அமெரிக்க திருமண தகவல் நிறுவனம் ஒன்று சர்வே நடத்தியுள்ளது. அதில் தெரியவந்திருக்கும் தகவல்கள்: அமெரிக்காவில் ஐந்தில் ஒரு டைவர்சுக்கு சமுதாய இணையதளங்கள் காரணமாக இருக்கின்றன

சமுதாய இணையதளங்கள் வந்ததில் இருந்து டைவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக 80 சதவீத விவாகரத்து ஸ்பெஷல் வக்கீல்கள் கூறுகின்றனர். டைவர்ஸ் விவகாரத்தை பொருத்தவரை அதிக பாவத்தை சம்பாதித்திருப்பது பேஸ்புக். மொத்தத்தில் இதன் பங்கு 66 சதவீதம். மை ஸ்பேஸ் (15%), ட்விட்டர் (5%) ஆகியவை அடுத்த இடத்தில் இருக்கின்றன. இந்த இணையதளங்களில் வரும் ஆபாசமான செய்திகள், புகைப்படங்கள் பலரது வாழ்க்கையை பாழாக்குகின்றன. கூடா நட்பு அதிகரிக்கிறது. இதுவரை கூச்சப்பட்ட விஷயங்களையும் பெரிய தவறுகளையும் செய்ய தூண்டுகிறது. அவை வெளிப்படும் பட்சத்தில் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு டைவர்ஸ் வரை போகிறது. இந்த நிலை நீடித்தால் சமுதாய இணையதளங்களால் தம்பதிகளிடையே புரிதல் குறைந்து ‘பிரிதல்’ அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கும்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv