மட்டு. வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் வரை உயிரிழப்பு-

இன்று கரடியனாறு காவற்துறை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 60க்கு பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 46க்கம் அதிகமானவர்கள் இதுவரையில மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்துள்ளவர்களுள் பொது மக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
(2ம் இணைப்பு)
இவ்வனர்த்தத்தில் 16 பொலிஸாரும்,2 சீனப் பிரஜைகளும்,7 பொதுமக்களும் பலியாகியுள்ளதுடன், 55 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், கரடியனாறு பொலிஸ் நிலைய கட்டிடம் தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv