தொழில்நுட்பமும் கலாச்சாரமும் பேஸ்புக்கும் விவாகரத்தும்


தமிழர்களே உஷார் இன்று இணையபாவனையாளர்களில் 76% பேஷ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களாம் அதிலும் பதின்மவயதினருக்கு இது அத்தியாவசியமயமாகிவருகிறதாம்!
தொழில்நுட்ப வளர்ச்சி நாகரிகவளர்ச்சியினால் இன்று மனிதனை அழிவை நோக்கி நகர்த்திச் செல்கிறது அதற்கு நல்ல உதாரணம் தொலைபேசி, தொலைபேசி அரிய கண்டுபிடிப்பு இன்று அதனால் எவ்வளவு அனுகூலங்கள் ஆனால் அதே தொலைபேசி
முறைதவறிய பாவனையால் மூளையிலிருந்து கலாச்சாரம் வரை ஆதிக்கம் செலுத்துகிறது.
இன்றைய இலங்கையில் பாடசாலையிலிருந்து, அலுவலகத்திலிருந்து,தனியார்வகுப்புகளிலிருந்து வெளியே வரும் பெண்பிள்ளைகள் போதைக்கு அடிமையானவர்கள்போல் தொலைபேசியை வேகமாக எடுத்து காதில் வைப்பதை காணக்கூடியதாகவுள்ளது இத்தொலைபேசி இவர்கள் துணைபோல வீடுவரைக்கும் துணைபோகிறது ஏனோ வீட்டைகண்டவுடன் துணை தேவையில்லை என நினைத்தோ பையில் போட்டுக்கொள்கிறார்கள்.
இதில் பெரும் கொடுமை என்னவென்றால் வெளிநாடுகளில் தூக்கம் துறந்து,கல்யாண வயதாகியும் பிரமச்சாரியாக இருந்து பல துன்பத்தை அனுபவித்தம் வெளிக்காட்டாமல் தன் உடன்பிறப்புக்களுக்கு பணம் அனுப்பும் அன்பானவர்கே சிறிது விசாரித்துப்பாருங்கள் உங்கள் பணம் எவ்வாறு விரயமாகிறதென்பதை.....
பேஸ்புக் என்பது ஒரு வலையமைப்பு அதனால் எவ்வளவு பிரிந்துபோன நண்பர்கள் சேர்ந்தோம் அனால் இன்று எதற்காக எவ்வாறு பாவிப்பது என்பது தெரியாமல் பாவித்தது நாங்கள் பழி இணையத்திற்கு.....இன்றைய இலங்கையில் 47 கணவன் மனைவி விவாகரத்து கோரிக்கைக்கு காரணம் பேஸ்புக்காம் நியாயமா????????????? எங்கள் பிழைக்கு அடுத்தவனை குற்றம் சொல்வது எங்கள் மரபல்லவா?
தழிழ் நண்பர்களே நமது கலாச்சாரத்தையும்,நம்மளையும் தொழில் நுட்பமோ, இணையமோ அழிப்பதில்லை நாங்களே........................................

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv