பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கல்மனம் படைத்த நபர்கள் .........ஓர் உளவியல் பார்வை........

ஒருவரை ஒருவர் இம்சித்தல், கொடு மைப்படுத்துதல் அல்லது அடக்கி வைத்தல் போன்றவை பல்வேறு கோணங் களில் ஆங்காங்கே நடைபெறுவது வழ மையாகி விட்டது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை வரை இத்தகைய செயற் பாடுகள் விஸ்வரூபமெடுத்து உயிர்க ளைப் பறிக்கும் அளவுக்கு சென்று விடு வதைத்தான் காண்கின்றோம்.

அந்நிய நாடுகளுக்கு உழைப்புக்காகச் சென்று இம்சிக்கப்பட்டுப் பல்வேறு நீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுக் கைதிகளாகி நாடு கடத்தப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவங்களை யும் நாம் அறிவோம்.
முள்ளு மரத்தை முளையிலே கிள்ள வேண்டும் எனும் பழமொழிதான் எனது சிந்தனைக்கு வருகின்றது. ஆயினும் இது எவ்வாறு சாத்தியப்படும் என்பதைப்பார்ப் போம்.
இரண்டிற்கு மேற்பட்ட பலர் ஒன்று சேரும்போது வீதிகள், பேருந்துகள், தொடர் உந்துகள் அல்லது பாடசாலைகள், அலு வலகங்கள் போன்ற இன்னோரன்ன இடங் களில் பல்வேறு விதமாக ஒருவரை ஒரு வர் தாக்கிப் பேசுதல், பரிகாசம் செய்து இம் சித்தல் போன்ற சம்பவங்களை நாம் காண் கின்றோம். ஆரம்பத்தில் முணுமுணுப்பில் அல்லது நகைச்சுவையாக ஆரம்பித்து நீதிமன்றுவரை செல்லும் சம்பவங்கள் பல வுண்டு.
தற்பெருமை கொண்டவர்கள்
எனக்கு நானேதான். நான் சர்வ வல்ல மையும் பெற்றவன். என்னால் எதையும் சாதிக்க முடியும் எனும் தற்பெருமை கொண்ட சுபாவத்தினர் மற்றையோரைப் பயமுறுத் திச் சம்மதிக்கச் செய்து அல்லது கட்டாயப் படுத்தித் தமது விருப்பத்திற்கு அல்லது இச்சைகளுக்கு இணங்க வைக்க முயல் கின்றனர்.
நிஜ வாழ்க்கையில் இருந்து விடுபட் டுப் பிறரைத் தொந்தரவு செய்வதில் அல் லது துன்புறுத்துவதில் பிரியமுள்ளவனாக மாறிவரும் மனோ நிலையுடையோன் வாழ்க் கையில் திருப்தி ஏற்படாது எதையோ தேடுவது போன்று சிறுபராயத்தில் துன் புறுத்தல்களுக்குள்ளாகி அல்லது ஏதேதோ காரணங்களினால் குடும்பப் பிணைப்பில் இருந்து விடுபட்டு தாய், தந்தை, சகோ தரங்கள் போன்ற நெருங்கிய உறவினர் களுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கள் காரண மாக மனம் மாறி அல்லது இதுபோன்ற வேறு காரணங்களினால் இத்தகைய செயற்பாடு களில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்பது சில உளவியல் நிபுணர்கள் கருத்தாகும். நண்பர்கள், உறவினர்களுடன் பழகும் போது அவர்கள் வெறுப்படையக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களில் ஆரம்பித்து படிப்படியாக பிறரைத் தொந்தரவு செய் வதில் பிரியமுள்ளவனாக மாறி பிறரைக் கொடுமைப்படுத்த நினைப்பதே இம்சித் தல் அல்லது பிறரைத் துன்புறுத்த நினைத் தலின் பரிணாம வளர்ச்சியாகும்.
தொந்தரவுகள் அல்லது சேஷ்டைகள்

* சிறுகுறும்பு, சேஷ்டை அல்லது தொந்தரவு செய்தலில் ஒருவருடன் அல் லது பலருடன் வீண்வார்த்தைகள் பேசி அவர்களைக் குழப்பித் திரும்பத் திரும்ப அவர்களுக்கு எரிச்சலூட்டும்போது அவர் கள் மனக் குழப்பமடைவர். இது ஒருவித துன்புறுத்தல்.

* கொடுமைப்படுத்தல், பிறரைத் துன் புறுத்துவதில் பிரியமானவனாதல், திட்டு தல் அல்லது நிந்தித்தல் இதன் அடுத்த படியாகும்.

* ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்து வேண்டுமென்றே அவரை நிந்தித்து அவ ருடன் குதர்க்க வாதத்தைத் தொடுத்து அவரைத் தட்டிக் குத்தி, அடித்துத் தள்ளி அவருடன் உடல் ரீதியான சேஷ்டைகள் விடுதல்.

* வேண்டுமென்றே ஒருவரது பொரு ளைக் களவாடுதல், சேதப்படுத்தல், ஒளித் தல் அல்லது பணம் தருமாறு வற்புறுத்த லும் தனக்கு விரும்பியதைச் செய்து தரு மாறு தொந்தரவு கொடுத்தலும்.


ஒருவரை வேண்டுமென்றே தனிமைப் படுத்துதல், அதாவது தான் இலக்குவைக் கும் நபருடன் அங்கு குழுமியிருக்கும் அனைவரையும் கதைக்காது தடுப்பதற்கு அவரைப்பற்றிய பொய், புழுகுக் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுதல், அலட்சி யப்படுத்தி அவருடன் கதைக்காது இருத் தல். இது உங்களது அலுவலகங்களில் உங் களுக்கே நடக்கலாம். சக ஊழியர்கள் அல் லது உங்கள் தரத்திற்குக் கீழ்ப்பட்ட உத்தி யோகஸ்தர்கள் சில சமயங்களில் உங் களது மேலதிகாரி கூட இவ்வாறு உங்களு டன் முரண்படலாம்.

* பாடசாலைகளிலும், இத்தகைய சம்ப வங்கள் நடைபெறலாம். ஆசிரியனால், மாணவரினால் அல்லது மாணவர்கள் இணைந்த குழுவினரால் இத்தகைய புறக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம்.
கொடுமைப்படுத்தல்
தங்களிலிருந்து எவ்விதத்திலாயினும் மாறுபட்டவர்களாயின் அதாவது மாற்று இனத்தவர், மாற்றுக் கலாசாரமுடையோர், வலுவிழந்தோர் அல்லது பகட்டானோர், வேற்று நாட்டினர் போன்றோருடன் மாறு பட்ட கண்ணோட்டத்தில் அவர்களை வித்தியாசமாய்க் கணிப்பிட்டு வகுப்பு வாதம் போன்று முரண்பட்ட செயற்பாடு களை அவர்கள் மேல் பிரயோகிக்க முய லும்போது கொடுமைப்படுத்தல் நிகழ்கின் றது. இவ்வாறான கொடுமைப்படுத்தலின் போது தம்மைப் பெரும்பான்மையினர் எனக் கருதிச் சிறுபான்மையினரை அடக்க எத்தனிக்கின்றனர். நலிவுற்ற அல்லது வலுவிழந்த சிறுபான்மையினரையே தான் இவர்கள் இலக்கிடுகின்றனர்.

துன்புறுத்தல் அல்லது கொடுமைப் படுத்தல் இசைவாக்கம் பெற்ற இவர்கள் முன்யோசனைகள் எதுவுமின்றிச் சுயமா கவே செயற்படுவர். இவ்வாறான துன்ப துயரங்களுக்குள்ளாவோர் படிப்படியாகத் தமது சுயகௌரவத்தை இழக்கின்றனர். வீஉலகமே இருள் சூழ்ந்தது போல், இவர் களது வாழ்க்கை சூனியமாகின்றது. கொடு மைப்படுத்துவோர், மற்றையோரை அடி மைப்படுத்தித் தமது கட்டுப்பாட்டில் வைத் துக் கொள்வதில் தாம் திறமைசாலிகள் என நினைத்துப் பூரிப்படைவர்.
பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் அல் லது வஞ்சம் தீர்க்க நினைக்காதவர்கள் மீதும் தமது தற்பாதுகாப்பிற்காகவேனும் எதிர்த் துச் சண்டையிட முடியாதவர்கள் மீதுமே தான் இவ்வாறான சேஷ்டைகள், துன்புறுத் தல்கள் பிரயோகிக்கப்படுகின்றது.
மேற்கூறிய துன்புறுத்தல்களை மேற் கொள்வோர் தமது சிறுபராயத்தில் இத்த கைய துன்புறுத்தல்களுக்கு ஆளாவத னால் உளவியல் ரீதியாகவே இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இவர்களது மன தில் தாழ்வு மனப்பான்மை குடிகொள்கி றது.

இதனால் இவர்களது உள்ளுணர்வு கள் ததும்பி உணர்ச்சிவசப்படுகின்றனர். இந்நிலையில் உள்ளடக்கி வைக்கப்பட்ட ஆத்திர உணர்வுகள் எரிமலையாக வெடித் துப் புகைகக்கி மற்றையோரைக் கொடு மைப்படுத்தத் தூண்டுகின்றது என்பது உளவியல் தத்துவமாகும்.
--------------------------------------
ஆங்கில மூலம்: சார் மெயின் பெர்னாண்டோ
தமிழ் வடிவம் : காரை ஆனந்தன்

நன்றி -உதயன்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv