கலர் பிலிமை கண்டு பிடித்த ஈஸ்ட்மேன்


திரைப்படங்களில் ஈஸ்ட்மேன் கலர் என்று போடப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். கமேராவில் கோடாக் பிலிம் என்று போடப்பட்டிருப்பதையும் பார்ப்பீர்கள். இவற்றைக் கண்டு பிடித்தவர்தான் ஈஸ்ட்மேன்.

1854 ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள வாட்டர் வில்லா என்ற இடத்தில் யூலை 12ம் திகதி இவர் பிறந்தார். அக்காலத்தில் புகைப்படம் எடுப்பது பெரும் செலவு கொண்ட விடயமாக இருந்தது. இதைக் குறைத்து எளிமையாக படம் எடுக்கும் வழியை கண்டறிவதாக சபதமெடுத்தார். இதன் பயனாக 1884ல் அவர் பிலிம் ரோலை கண்டு பிடித்தார். தொடர்ந்து 1888ல் எளிதாக இயங்கும் கமேராவை கண்டு பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர்தான் கோடாக். 1897 ல் பாக்கட்டில் வைத்துச் செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1898 ல் மடித்து செல்லும் கமேராவை கண்டு பிடித்தார். 1928 ல் சினிமாவிற்கான கலர் பிலிமை அறிமுகம் செய்தார். கமேராவில் முதன் முதலில் பிளாஸ் பயன்படுத்தியவரும் இவர்தான். பெரும் புகழும் பணமும் சம்பாதித்த இவர்தான் தொழிலாளிகளுக்கு இலாபத்தில் பங்கு கொடுத்தவராகும்.

இவருடைய வாழ்க்கையில் நாம் காணும் உண்மை சபதம்தான். மற்றவரை அழிக்க வேண்டும் என்று சபதமெடுக்காமல், ஆக்க சக்திக்காக சபதமெடுத்தார் என்பதுதான். சபதம் எடுங்கள் நல்ல செயல்களுக்காக மட்டும். இறைவன் உங்களுக்கு ஈஸ்ட்மேனுக்கு கொடுத்தது போல வெற்றியைத் தருவார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv