இங்கிலாந்தில் மிகப்பிரபலமான 10 மொழிகளில் தமிழும் உள்ளடக்கம்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் மிகப்பிரபலமான மொழிகளில் தமிழ் மொழி முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக லண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவசர உதவிகளுக்காக காவற்துறையினரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் மொழியும் உள்ளடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சராசரியாக 8 ஆயிரம் அவசர அழைப்புகளும், 12 ஆயிரம் அவசரம் சாராத அழைப்புகளும் தமிழ் மொழி பேசுபவர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வரிசையில் உள்ள ஏனைய மொழிகளாக போலந்து, ரோமான், பஞ்சாப், போர்த்துக்கல், ஸ்பெனிஸ், துருக்கிய மொழி, சோமாலி, பிரென்ச், மற்றும் பெங்காளி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன.

இதேவேளை பிரித்தானியாவில் ஆங்கிலம் தவிர தமிழ் மொழியிலும் அவசர அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் அறிவித்து அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு சென்ற தமிழர்களின் காரணமாகவே தமிழ்மொழி பயன்பாடு 10 இடங்களுக்குள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv