உதிர்ந்துவிட்ட பூ நான்


நான் கொஞ்சி கெஞ்சிய
வார்த்தைகள் எல்லாம்
பொய்யாய்ப் போனதடி..
நீ மௌனமாய் ஆனதால்..

ஒரு நாள் பேசவில்லை என்று
என் மீது அன்பாய் கோபம் கொண்டாய்
ஆனால் இன்றோ பேசாமல்
இருப்பதட்காவே
போனை ஒப் பன்னுகின்றாய்

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு செடிகொடி இடம் காட்டியிருந்தாலும்!
இந்நேரம் அதோட அன்பை
பூக்களாய்த் தந்திருக்கும்!

உன்னிடம் காட்டிய நேசத்தை
ஒரு பறவை விலங்கிடம்
காட்டியிருந்தாலும்
தன் உடல் அசைவுகளால் தன்
அன்பைச் சொல்லியிருக்கும்.!

அடைக்கப் பட்ட இதயத்தில்
அடைபட்ட உனது நினைவுகள்
அனுதினமும் கொஞ்சும் வார்த்தைகள்.
உன்னைச் சுற்றி வந்தே
சிறகு இழந்த பறவை நான்
கால் மணி நேரம் என்றாலும்
காத்திருப்பேன் உன்னுடன் பேசவே
ஆனால் இன்றோ..????

எனக்கு நீ கிடைத்த பொக்கிஷமாய்
நான் நினைத்திருந்தேன்..
உன்னை பிரியவே எனக்கு
கஷ்டமாய் இருக்குமடா என்று சொன்னவள்
இன்று பிரியவே பிரியப்படுகிறாய்..

மனமில்லாமல் வெறுக்கிறேன்
வாழ்கையின் கடமைகளை நினைத்து
உன்னைவிட்டு விலகவே நினைக்கிறேன்
மறுகணமே கண்ணீர்விட்டு அழுகிறேன்
என்னைவிட்டு பிரிந்துவிடாதே என்று
இருந்தும் மாற்றம் இல்லை
மறந்துவிடு என்னை
நான் மரணித்துவிட்டேன் என்று
நட்பாகக் கூட என் உறவு உனக்கு வேண்டாம்!

தவறிப் போய்விட்ட என்
வாழ்க்கைப் பயணம்!
மீளமுடியாமல் தவிக்கிறேன்!
தொலைந்த எனது இரவுகளை
நினைத்து பசிக்கும் நேரத்தை மறந்து
உன்னைப் பார்த்த
என்றும் அழியாத நினைவுகளை
எனக்கு நீ கொடுத்த பரிசு!
இத்தனை வருடம் நான் நேசித்ததற்கு.!

செடியில் ஒரு பூ உதிர்வதால்
செடிகளுக்கு என்றும் வருத்தம் இல்லை!
ஒரு பூ உதிர்ந்தாலும் மறு பூ பூத்துவிடும்!
நீ செடியாக நான் அதில்
மலர்ந்த பூவாக!
உதிர்ந்துவிட்ட பூ நான்!

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv