சிந்தனைத்துளிகள்

01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான் மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன் செயற்படுங்கள்.

02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.

03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை கொண்ட மனமே கல்லறையாகும்.

04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.

05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று கவலைப்பட்டுத் திரிந்தேன்.

06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச் சீராக்கும்.

07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க விடப்படுவார்கள்.

08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள் அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv