சாதனை மேல் சாதனை

மேற்குலகின் மிக உயரிய இசைவிருதுகளாக வர்ணிக்கப்படும் கிராமி விருதுகள் இரண்டை ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் வென்றிருக்கிறார்.

திரைப்படத்துறையில் உலகின் மிக உயரிய விருதாக வர்ணிக்கப்படும் ஆஸ்கார் விருதை ஏ ஆர் ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், இப்போது மேற்குலகின் மிக உயர்ந்த இசைவிருதாக வர்ணிக்கப்படும் கிராமி விருதை அவருக்கு பெற்றுத்தந் திருக்கிறது.

கிராமி விருது பெற்றபிறகு ஏ ஆர் ரஹ்மான்
கிராமி விருது பெற்றபிறகு ஏ ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனேர் படத்தில் இடம்பிடித்த இந்த பாடலுக்காக அளிக்கப்பட்ட கிராமி விருதை லாஸ் ஏஞ்ச லீஸில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்ட ரஹ்மான் இந்த விருது கிடைத்திருப்பதை மிகப்பெரிய கெளரவமாக கருதுவதாக தெரிவித்தார்
"கிராமி விருதுகள் அடிப்படையில் இசைக்காகவே அளிக்கப் படும் விருதுகள் என்பதால் இவற்றை வென்றிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய கெளரவமாக ஒன்றாக கருதுகிறேன். இந்தியாவிலிருந்து வந்த எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீ காரமாகவே இதை நான் பார்க்கிறேன்.

ஸ்லம் டாக் மில்லியனேர் படப் பாடலுக்கு ஆஸ்கார் விருதுக்கு அடுத்து கிராமி விருதுகள் கிடைத்திருப்பது என்பது ஒருவகையில் அதன் வெற்றியின் முழுமையான வடிவமாகவே கருதுகிறேன். இதற்குமேல் அந்த பாடல்கள் வேறெங்கும் செல்லும் என்று தோன்றவில்லை. கிராமி விருதுகள் கிடைத்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி", என்றார் ஏ ஆர் ரஹ்மான்.

இந்த விருதுகள் கிடைத்திருப்பதை எப்படி கொண்டாடினீர்கள் என்று கேட்டபோது, தாம் புதிய இசையமைப்பில் இறங்கிவிட்டதாக கூறினார் ரஹ்மான்.

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv