வீட்டிற்குள் உட்கார்ந்து கம்ப்யூட்டர் கேம் ஆடும் சிறுவர்களுக்கு ஆபத்து

பிரிட்டனின் சௌத்தாம்ப்டனில் அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் சில திடுக்கிடும் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. வீட்டிற்குள் உட்கார்ந்து கம்ப்யூட்டரிலும் வீடியோவிலும் கேம் ஆடிக் கொண்டிருக்கும் சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் எலும்பு குறைபாட்டு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல சிறுவர்களையும் இந்த நோய் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பழங்காலங்களில் எல்லாம் சரியான ஊட்டச்சத்து கொடுக்க முடியாத வைட்டமின் குறைபாடு உள்ள ஏழைகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமே இந்த நோய் தாக்கும் என நம்பப்பட்டது.


ஆனால் தற்போது வசதியாக வீடுகளுக்குள் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் பணக்கார சிறுவர்களிடம் இந்நோய் அதிகமாக காணப்படும் அபாயம் உள்ளது. ரிக்கெட்ஸ் என்பது வைட்டமின் - டி குறைபாட்டினால் ஏற்படும் ஒரு நோய்.

இந்த நோய் உண்டாகும் குழந்தைகளின் எலும்புகள் பலவீனமடைந்து வில் போன்று வளைந்து விடும். சூரிய ஒளியிலிருந்தே அதிகமான வைட்டமின் -டி கிடைப்பதால் பெற்றோர்கள் சிறுவர்களை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டும் என ஆராயச்சியாளர்கள் பெற்றோர்களை எச்சரித்து வருகின்றனர்.


-------

இணையக் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க எளிய முறைகள்

------------

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv