பிரிட்டனின் குடிவரவுச் சட்டத்தில் பாரிய மாற்றங்களை பிரதமர் பிரவுண் அறிவிப்பு "பிரிட்டனின் தொழில்வாய்ப்பு பிரிட்டிஷாருக்கே


: பிரிட்டனின் தொழில் வாய்ப்புக்கள் பிரிட்டிஷாருக்கே என்ற தனது வாக்குறுதியின் ஓரங்கமாக பிரிட்டனின் குடிவரவுத்துறை சட்ட விதிகளில் பாரிய மாற்றங்களை நேற்று முன்தினம் அறிவித்திருக்கும் அந்நாட்டுப் பிரதமர் கோர்டன் பிரவுண், குடியேற்றவாசிகளுக்கான ஆயிரக்கணக்கான தொழில்சார் சிறப்புத் தேர்ச்சிபெற்ற தொழில் வாய்ப்புகள் இனிமேல் பிரிட்டனில் பிறந்தவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றவாசிகளுக்குமே என்று மட்டுப்படுத்தியிருக்கிறார்.
“மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள், சமையல்காரர்கள், பராமரிப்பு பணியாளர்கள், தொழில்சார் சிறப்பு தேர்ச்சியுடைய பணியாளர்களும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் இனிமேல் உள்நாட்டிலிருந்தே பணிக்கு சேர்க்கப்படுவர். ஐரோப்பிய ஒன்றியத்தை சாராதவர்களும் இதுவரை காலமும் இந்தப் பணிகளில் ஈடுபடக் கூடியதாக இருந்தது. அது இப்போது அகற்றப்பட்டுள்ளது.
அதிகளவு தொழில்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கவுள்ளோம். புள்ளி அடிப்படையில் பிரவேசிப்பதற்கு தகுதியான தொழில்கள் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதால் ஆயிரக் கணக்கில் தொழில் வாய்ப்புகள் கிட்டும் என்று பிரவுண் கூறியுள்ளார்.
மாணவர் விசாக்களுக்கான சட்டவிதிகள் புள்ளி அடிப்படையிலான புதிய முறைமையால் ஏற்கனவே கடினமானதாகியுள்ளது. இந்த முறைமையிலுள்ள துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக இந்த முறைமை மேலும் கடினமானதாக்கப்படவுள்ளது. குறுகிய கால கல்வி நடவடிக்கைகளிலும் பார்க்க, பட்டப் படிப்பு, பட்டப் பின் கல்வி ஆகியவற்றுக்காக மட்டும் எதிர்காலத்தில் அனுமதி வழங்கும் வகையில் மாணவர் விசாக்களில் கட்டுப்பாடுகள் வரக்கூடும்.
எமது அரசியலில் மிகவும் முக்கியமான விவகாரமாக உள்ளது என்றும் குடிவரவு தொடர்பான நடவடிக்கைகள் இனவாதத் தன்மை கொண்டவை என்று தெரிவிக்கப்படும் தகவல்களை "சோம்பேறித்தனமான மேட்டுக் குடிவாதம்%27 என்று கடுமையான வார்த்தைத் தொணியில் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.
குடிவரவை ஒரு விவகாரம் அல்ல என்று நிராகரிக்கும் சோம்பேறித்தனமான மேட்டுக்குடி வாதத்தை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. குடிவரவு தொடர்பான அக்கறையை வெளிப்படுத்தினால் ஒருவரை இனவாதி என்று காட்ட முற்படுவதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு வெள்ளையின தொழிலாளர் வர்க்கத்தை சாடும் விதத்தில் பிரவுண் இந்தக் கருத்தை தெரிவித்திருப்பதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் கன்சர்வேட்டில் கட்சியினரின் குடிவரவுப் பிரச்சினை தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்களை பிரவுண் நிராகரித்துள்ளார். பிரிட்டிஷ் சமூகத்துக்கு பங்களிப்பு செய்வோர் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும். பிரிட்டிஷ் வாழ்க்கை முறைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏதோவொன்றுக்கு ஏதோவொன்று, இல்லாததற்கு இல்லை என்பதே எமது சமூகம் என்றும் பிரவுண் தெரிவித்துள்ளார்.
லண்டன் ரைம்ஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

Live Tv